மேலும் அறிய

விஜய் எங்களுக்கு எதிரி கிடையாது; சொந்த பணத்தை பாஜக கொடுக்க வேண்டியது தானே? – சரமாரியாக சாடிய ஜெயக்குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார் தவெக தலைவர் விஜய்

விஜய் எங்களுக்கு எதிரி கிடையாது எனவும் பாஜக பீகாருக்கு மட்டும் நிதி ஒதுக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார் தவெக தலைவர் விஜய்.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தவெகவின் இரண்டாம் ஆண்டு விழா இன்று நடக்கிறது. அதற்கு நான் வாழ்த்துகள் தான் சொல்ல முடியும். இரண்டு ஆண்டு குழந்தைக்கு எனது வாழ்த்துகள். தேர்தலை பொறுத்தவரை பல மாதங்கள் இருக்கு. யார் யாருடன் கூட்டணி என்று இப்போது நான் சொல்ல முடியாது. அப்போது முடிவு பண்ணி கட்சி சொல்லும். விஜய் எங்களுக்கு எதிரி கிடையாது. எங்களை பொறுத்தவரை அவர் எதிரி இல்லாத சூழ்நிலையில் ஏன் நாம் விமர்சனம் செய்ய வேண்டும். தேவையில்லாதது.

பாஜகவை பொறுத்தவரை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதான் சொல்லியிருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் எந்த மாற்றமும் இல்லை. பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் பற்றி ஒரு வார்த்தையாவது இருக்கா? கிடையாது. தமிழை மட்டும் வாசிக்கிறீங்க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள். போன முறை ஆந்திர பிரதேசத்திற்கும் பீகாருக்கு மட்டும் அள்ளி அள்ளி கொடுத்தீங்க. இந்தியாவில் இரண்டு மாநிலங்கள்தான் இருக்கா?

அண்ணா சொன்னமாதிரி, வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது. 2025ஆம் ஆண்டு தேர்தல் நடக்க உள்ளதால் பீகாருக்கு ஏராளமான திட்டங்கள். அவர்கள் வாக்குகளை பெற பாஜக அரசு இதுபோன்று செய்கிறது. அதற்கு மக்கள் வரிப்பணம் தான் கிடைத்ததா? சொந்தமாக பாஜக நிதியை எடுத்து கொடுங்க. ” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்
ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்
தமிழக அளவில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு 2-ம் இடம்: ஆணையர் பெருமிதம் 
தமிழக அளவில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு 2-ம் இடம்: ஆணையர் பெருமிதம் 
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
"ஒரு பைசா கூடத் தொட மாட்டேன்னு சொன்னீங்களே?" - முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் சரமாரி கேள்வி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Embed widget