Kamal Haasan : மத அரசியலை எதிர்க்க வேண்டும்; சென்னையில் விரைவில் ஜல்லிக்கட்டு: கமல்ஹாசன் சொன்ன தகவல்!
Kamal Haasan : மத அரசியலை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மத அரசியலை எதிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சியினரிடையே பேசுயுள்ளார்.
சென்னை அடையாறு நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார். ராகுல் காந்தி முன்னெடுத்த இந்திய ஒற்றுமை பயணத்தில் தன்னோடு பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், கட்சியின் அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவில் பா.ஜ.க. மத அரசியலை செய்து வருவதாகவும், நாட்டில் பிரிவினை ஏற்படுத்துவதை எதிர்க்க வேண்டும் என்று அவர் கட்சியினரிடையே கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இடம் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





















