Train Cancel: சென்னை மக்களே! சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரை செல்லும் ரயில்கள் ரத்து.. முழு விவரம்..
இன்று முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் தாம்பரம் - கடற்கரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தாம்பரம் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் உள்புறமும், புறநகரங்களில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் மின்சார ரயில்களின் போக்குவரத்து சேவை மிகவும் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகிறது. சென்னையில் புறநகர் ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து சென்னைக்கும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலும், மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தென்னக ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “"பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயிலும் மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள் பலரும் இந்த கடைசி ரயிலை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த சேவை ரத்து செய்யப்படுவதால் மாற்று போக்குவரத்தை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை 84 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆவடி, அரக்கோணம், கடம்பத்தூர், திருவள்ளூர், திருத்தணி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இரவு 9.25, 10.25 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் செல்லும் மின்சார ரயில், இரவு 10 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் இரவு 10.20, 11.15 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டது. அதேபோல, இரவு 10.20 மணி, 11.45 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில், இரவு 11.45 மணிக்கு மூர்மார்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில், இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம் செல்லும் ரயில், இரவு 8.50 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து மூர்மார்கெட்டிற்கு வரும் ரயில், இரவு 10.45 மணிக்கு பட்டாபிராமில் இருந்து மூர்மார்க்கெட் வரும் ரயில், இரவு 11.55 மணிக்கு பட்டாபிராமில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயல்கள் என 84 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
Crime: அடுத்தடுத்த கொள்ளை சம்பவம்.. நகை பட்டறையில் இருந்து 6. 400 கிலோ தங்கம் திருட்டு..