மேலும் அறிய

உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி உள்ளதா?" - நீதிமன்றம் கேள்வி

’’தேர்தல் ஆணையம் தரப்பில் இதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது இதை ஏற்று நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு’’

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"ஆணையம் நடத்தும் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தாரின்  சொத்து விபரங்கள், வழக்கு மற்றும் தண்டனை விபரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய  வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தற்போது நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பயன்படுத்தப்பட்ட பிரமாண பத்திரம், கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வடிவில் இருந்தது. இதில் வேட்பாளர், வாழ்க்கைத் துணை, மற்றும் வேட்பாளரை சார்ந்தவர்களின் கடந்த ஐந்து வருட வருமானம், வருவாய் ஆதாரங்கள் குறித்த விவரங்கள், அரசின் துறைகளில் எடுக்கப்படும் ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்கள் மற்றும் ஆதார் எண், ஆதார் முகவரி போன்ற விவரங்கள் கோரப்படவில்லை. எனவே மேற்கூறிய விவரங்களை குறிப்பிட பிரமாண பத்திரத்தில் உரிய மாறுதல்கள் செய்ய வேண்டும்.
 
உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி உள்ளதா?
 
உச்சநீதிமன்றம் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது குறித்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த உத்தரவிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அதனை 2019 பாராளுமன்ற தேர்தலில் அமல்படுத்தியது. ஆனால் ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. ஆகவே அந்த உத்தரவுகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தவும், அதுவரை நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என இடைக்கால உத்தரவிட வேண்டும். மேலும், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு மற்றும் பிராமண பத்திரத்தை உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பெறவும், அதனை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில், " இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நகராட்சி தேர்தலுக்கானது அல்ல" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், " உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் வேட்புமனு உள்ளதா?" என கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையம் தரப்பில் இதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது இதை ஏற்று நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget