கரூர் மாநகராட்சியில் வீடுகள் தோறும் QR CODE முறை அறிமுகம்
இந்த நிலையில் கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும், சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை ஆகியவற்றை செலுத்தவும் QR CODE ஸ்கேன் சேவைகளை பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள் சேவைகளை பெற வீடுகள் தோறும் QR CODE ஒட்டும் பணி மேயர், ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள் சேவைகளை பெற வீடுகள் தோறும் QR CODE ஒட்டும் பணி மேயர், ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் சேவைகளை பெறவும், புகார்களை தெரிவிக்கவும் டிஜிட்டல் மயமாக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும், சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை ஆகியவற்றை செலுத்தவும், உரிமம் பெறுவதற்கும், புதுப்பிக்கவும் காலதாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு QR CODE ஸ்கேன் செய்வதன் மூலமாக உடனடியாக சேவைகளை பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக இதை நடைமுறைப்படுத்தும் விதமாக மாநகராட்சிக்குட்பட்ட KVB நகர், விஜய் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் QR CODE ஒட்டும் பணி நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் ரவிச்சந்திரன் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். QR CODE ஸ்கேன் செய்வதன் மூலமாக அறிவிக்கப்படும் புகார்கள் மாநகராட்சி அலுவலகம் மட்டுமின்றி, சென்னை நகராட்சி நிர்வாக துறை அலுவலகத்திற்கும் நேரடியாக தெரியும் வண்ணம் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், பொதுமக்கள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று மேயர் கவிதா கணேசன் தெரிவித்தார்.