ஆரஞ்சு நிற விளக்குகளால் ஒளிரும் சென்னை மாநகராட்சி கட்டடம்.. ஏன் தெரியுமா?
இந்த ஆண்டுக்கான பிரச்சாரமானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தன்று தொடங்கி டிசம்பர் 10ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று முடிவடையும்
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1960ல் ரஃபேல் ட்ருஜில்லோவின் உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்ட டொமினிகன் குடியரசு ஆர்வலர்களான மிராபல் சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாக இந்த நாள் உருவாக்கப்பட்டது. இந்த நாளில் ஆரஞ்சு நிறம் அதிகம் பயன்படுத்தப்பட்டு உணர்த்தப்படுகிறது. பிரகாசமான எதிர்காலத்தை குறிக்கும் விதமாக இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது. இன்று சென்னை மாநகராட்சி கட்டடம் ஆரஞ்சு நிற விளக்குகளால் ஒளிர்கிறது
நவ.25 : சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் : சென்னையில் ஆரஞ்சு நிற விளக்குகளால் ஒளிரும் மாநகராட்சி கட்டடம்https://t.co/wupaoCQKa2 | #OrangeDay #ChennaiCorporation #EliminationofViolenceAgainstWomen #OrangeTheWorld pic.twitter.com/T1d9FFTHvY
— ABP Nadu (@abpnadu) November 25, 2022
அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான பிரச்சாரமானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தன்று தொடங்கி டிசம்பர் 10ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று முடிவடையும் 16 நாள் முயற்சியாகும். இந்த நாளைப் பற்றி மேலும் சில தகவல்கள் கீழே....
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தின் 2022 கருப்பொருள் ‘யுனைட்! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்பாடு.’ ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்த பிரச்சாரம் நவம்பர் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 10ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று முடிவடையும் 16 நாட்கள் செயல்பாட்டின் முயற்சியாக இருக்கும்.
“பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும், பெண்கள் உரிமை ஆர்வலர்களுடன் ஒற்றுமையாகத் துணைநிற்பதற்கும், பெண்ணிய இயக்கங்களை ஆதரிப்பதற்கும் பெண்கள் மீதான வன்முறையைத் தடுப்பதற்காக அனைத்து சமூகங்களையும் அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டது இது."
1979ல் ஐநா பொதுச் சபை, பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மாநாட்டை (CEDAW) நிகழ்த்தியது. இன்னும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது உலகம் முழுவதும் காணக்கூடிய ஒரு பிரச்சனை. இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கு, பாலின அடிப்படையிலான வன்முறை இல்லாத உலகத்திற்கு அடித்தளம் அமைக்க பொதுச் சபை 48/104 தீர்மானத்தை வெளியிட்டது.
1981 முதல், பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக குரல் எழுப்பும் நாளாக நவம்பர் 25 நினைவுகூரப்படுகிறது. 1960ல் டொமினிகன் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ரஃபேல் ட்ருஜிலோவின் உத்தரவின் பேரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூன்று அரசியல் ஆர்வலர்களான மிராபால் சகோதரிகளுக்காக இந்த தேதி நினைவுகூரப்படுகிறது.
பொதுச்சபை 20 டிசம்பர் 1993 அன்று 48/104 தீர்மானத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பது குறித்த பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.
மேலும், அது CEDAWன் 54/134 தீர்மானத்தையும் ஏற்றுக்கொண்டது, பிப்ரவரி 7, 2000 அன்று பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக நவம்பர் 25ஐ அதிகாரப்பூர்வமாக நியமித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை (VAWG) இன்று உலகில் மிகவும் பரவலான, தொடர்ச்சியான மற்றும் பேரழிவு தரும் மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும். மேலும், அதைச் சுற்றியுள்ள தண்டனையின்மை, மௌனம், களங்கம் மற்றும் அவமானம் காரணமாக இது இன்னும் அதிகமாகப் புகாரளிக்கப்படாமல் உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் பாலின அடிப்படையிலான வன்முறையைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நினைவுகூரப்படுகிறது.
இந்த பாலின அடிப்படையிலான வன்முறை உடல், பாலியல் மற்றும் உளவியல் வடிவங்களில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கான ஒரு நாள். அனைத்து வயதினருக்கும் பாலின அடிப்படையிலான வன்முறையின் பாதகமான விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை மேற்கொள்கிறது.
மேலும், சமத்துவம், மேம்பாடு மற்றும் அமைதிக்கான பாதையில் எண்ணற்ற தடைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்குக் குரல் கொடுக்க வேண்டிய நாள் இதுவாகும்.
இந்த நாளில் ஆரஞ்சு நிறம் அதிகம் பயன்படுத்தப்பட்டு உணர்த்தப்படுகிறது. பிரகாசமான எதிர்காலத்தை குறிக்கும் விதமாக இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது