மேலும் அறிய

வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!

"சென்னையில் ஆவின் பாலகம் அமைக்க ஆர்வம் உள்ளவர்கள் வரும் ஜூன் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது."

சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நகரின் முக்கிய ஒன்பது இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் 'ஆவின் பாலகம்' நடத்துவதற்கான அரிய வாய்ப்பை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை பெரம்பூர் கவியரசு கண்ணதாசன் நகர், தி.நகர் கிரியப்பா சாலை, தி.நகர் லலிதாபுரம், பாலவாக்கம் பல்லவன் குடியிருப்பு, மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனி, அண்ணா நகர் இமயம் காலனி, ஷெனாய் நகர் பாரதிபுரம், கிண்டி சிட்கோ, மற்றும் வேளச்சேரி தொழிலாளர் காலனி, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் ஆவின் பாலகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

இந்த ஆவின் பாலகங்களை நடத்துவதற்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், பாதுகாப்பு வைப்புத்தொகையாக 1 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று ஆவின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூன் 10-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி, நேரியலாகவோ அல்லது தபால் வாயிலாகவோ "பொது மேலாளர், சந்தைப்படுத்தல் பிரிவு, ஆவின், எண் 3 ஏ, பசும்பொன் முத்துராமலிங்கனார் சாலை, நந்தனம், சென்னை - 35" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கூடுதல் விபரங்கள் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்

இந்தத் திட்டம் குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் ஆவின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://aavin.tn.gov.in/ என்ற முகவரியைப் பார்வையிடலாம். மேலும், 1800 425 3300 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டும் தேவையான விபரங்களை அறிந்து கொள்ளலாம் என ஆவின் நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! ஆகஸ்ட் 14 முதல் தொடர்ந்து 3 நாட்கள் லீவ்! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! தொடர்ந்து 3 நாட்கள் லீவ்! ஆட்சியர் அறிவிப்பு!
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
திடீர் மின் தடை அறிவிப்பு! சென்னையில் உஷாராக இருக்க வேண்டிய முக்கிய பகுதிகள் இவைதான்!
திடீர் மின் தடை அறிவிப்பு! சென்னையில் உஷாராக இருக்க வேண்டிய முக்கிய பகுதிகள் இவைதான்!
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget