தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் 67.75லட்சம் பேர்.. தகவலை வெளியிட்ட தமிழக அரசு.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67.75 லட்சம் நபர்கள் காத்திருப்பதாக மாநில அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67.75 லட்சம் நபர்கள் காத்திருப்பதாக மாநில அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு வேலைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதேபோல், ஒருசில பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் நியமிக்கப்படுகின்றனர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் போன்றவை வழங்கப்படுகிறது. இதற்கு பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
அரசுப் பணிக்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67,75,250 ஆக உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களில் ஆண்கள் 36,14,327, பெண்கள் 31,60,648, திருநர் 275 ஆகும்.
இவா்களில் 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவா்களே அதிகமாக உள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 19-30 வயதைச் சோ்ந்தவா்கள் 27,95,278 போ் ஆகும். 18 வயதுக்குக் குறைவானவா்கள் 19,09,325 பேரும், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்கள் 18,34,994 பேரும், 46 முதல் 60 வயதுக்கு உட்பட்டவா்கள் 2,29,978 பேரும் உள்ளனா். 60 வயதைக் கடந்தவா்களின் எண்ணிக்கை 5,675 ஆக உள்ளது. ஒட்டுமொத்த பதிவுதாரா்களில் 1,43,396 மாற்றுத் திறனாளிகளும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. அவா்களில் ஆண்கள் 95,247 பேரும் , பெண்கள் 48,149 பேரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.