கரூர்: பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 1261 கனஅடியாக அதிகரித்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 11.08 மில்லி மீட்டர் மழை பதிவானது.
பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கரூர் அருகே, மழை காரணமாக பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1011 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 79.66 அடியாக இருந்தது. கரூர் அருகே, பெரியாண்டவர் தடுப்பணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு, 602 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் மழை காரணமாக காலை 6 மணிக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 1261 கனஅடியாக அதிகரித்தது.
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து, ஐந்தாயிரத்து, 285 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 2582 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக, காவிரி ஆற்றில் 1 லட்சத்து, 11 ஆயிரத்து, 932 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்கால்களில் 1320 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், மழையின் நிலவரம்
கரூர் மாவட்டத்தில் காலை 8 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு கரூர் 23.2 மில்லி மீட்டர், அரவக்குறிச்சி 13 மில்லி மீட்டர் , அணைப்பாளையம் 14 மில்லி மீட்டர், க.பரமத்தி 16.8 மில்லி மீட்டர், குளித்தலை 9 மில்லி மீட்டர், தோகை மலை 6 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரம் 1.6 மில்லி மீட்டர், மாயனூர் 4 மில்லி மீட்டர், பஞ்சப்பட்டி 23.4 மில்லி மீட்டர், மைலம்பட்டி 22 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 11.08 மில்லி மீட்டர் மழை பதிவானது.