மேலும் அறிய

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 21 கன அடியில் இருந்து 33 கன அடியாக அதிகரிப்பு.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 33 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 21 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 33 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 21 கன அடியில் இருந்து 33 கன அடியாக அதிகரிப்பு.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 51.00 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 18.44 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 21 கன அடியில் இருந்து 33 கன அடியாக அதிகரிப்பு.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
Elon Musk: ஆத்தாடி..! சம்பளமே, ரூ.8,86,59,40,00,00,000 கோடியாம் - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய எலான் மஸ்க்
Elon Musk: ஆத்தாடி..! சம்பளமே, ரூ.8,86,59,40,00,00,000 கோடியாம் - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய எலான் மஸ்க்
TN weather Report:  6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
RCB Sale: ஆர்சிபி விற்பனைக்கு வந்தது ஏன்? புதிய ஓனர் யார்? அதானியை சமாளிக்குமா JSW? கோலி நிலை என்ன?
RCB Sale: ஆர்சிபி விற்பனைக்கு வந்தது ஏன்? புதிய ஓனர் யார்? அதானியை சமாளிக்குமா JSW? கோலி நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj
திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
Elon Musk: ஆத்தாடி..! சம்பளமே, ரூ.8,86,59,40,00,00,000 கோடியாம் - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய எலான் மஸ்க்
Elon Musk: ஆத்தாடி..! சம்பளமே, ரூ.8,86,59,40,00,00,000 கோடியாம் - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய எலான் மஸ்க்
TN weather Report:  6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
RCB Sale: ஆர்சிபி விற்பனைக்கு வந்தது ஏன்? புதிய ஓனர் யார்? அதானியை சமாளிக்குமா JSW? கோலி நிலை என்ன?
RCB Sale: ஆர்சிபி விற்பனைக்கு வந்தது ஏன்? புதிய ஓனர் யார்? அதானியை சமாளிக்குமா JSW? கோலி நிலை என்ன?
Krishnagiri: எதிர்வீட்டு பெண்ணுடன் தொடர்பு.. குழந்தையை கொன்ற இளம்பெண்!
Krishnagiri: எதிர்வீட்டு பெண்ணுடன் தொடர்பு.. குழந்தையை கொன்ற இளம்பெண்!
Tata EV Discounts: லட்சத்தில் தள்ளுபடி, வரியும் இல்லை - 490KM  ரேஞ்ச், டாடா மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
Tata EV Discounts: லட்சத்தில் தள்ளுபடி, வரியும் இல்லை - 490KM ரேஞ்ச், டாடா மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Bihar Election 2025 Update: பீகார் தேர்தல் 2025; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவு
பீகார் தேர்தல் 2025; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவு
Embed widget