மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து 20,910 கன அடியில் இருந்து 23,989 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து காணப்பட்டது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 5,054 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 20,910 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 23,989 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 20,910 கன அடியில் இருந்து 23,989 கன அடியாக அதிகரிப்பு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 50.03 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 17.83 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஆனால் நடப்பு ஆண்டு போதிய நீர் மேட்டூர் அணையில் இல்லாத காரணத்தினால் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 20,910 கன அடியில் இருந்து 23,989 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Meendum Manjappai Campaign : மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம்.. வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு..
மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம்.. வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு..
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
Group 2 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு கேள்வித்தாள் எப்படி? கட் ஆஃப் எவ்வளவு தேவை?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு கேள்வித்தாள் எப்படி? கட் ஆஃப் எவ்வளவு தேவை?
Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப்போகும் சுந்தர் சி! வெளியானது அறிவிப்பு! - நடிகை இவர்தான்!
Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப்போகும் சுந்தர் சி! வெளியானது அறிவிப்பு! - நடிகை இவர்தான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?Nitin Gadkari on Congress : ’’எனக்கு பிரதமர் பதவி’’எதிர்க்கட்சி பக்கா ஸ்கெட்ச்! போட்டுடைத்த  கட்காரிMK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meendum Manjappai Campaign : மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம்.. வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு..
மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம்.. வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு..
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
Group 2 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு கேள்வித்தாள் எப்படி? கட் ஆஃப் எவ்வளவு தேவை?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு கேள்வித்தாள் எப்படி? கட் ஆஃப் எவ்வளவு தேவை?
Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப்போகும் சுந்தர் சி! வெளியானது அறிவிப்பு! - நடிகை இவர்தான்!
Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப்போகும் சுந்தர் சி! வெளியானது அறிவிப்பு! - நடிகை இவர்தான்!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
SIIMA Winner List : ஐந்து விருதுகளை தட்டித்தூக்கிய ஜெயிலர்...சைமா விருது வென்றோர் முழுப் பட்டியல் இதோ
SIIMA Winner List : ஐந்து விருதுகளை தட்டித்தூக்கிய ஜெயிலர்...சைமா விருது வென்றோர் முழுப் பட்டியல் இதோ
"கடைசி முறையா கூப்பிடுறேன்" விடாபிடியாக இருக்கும் மருத்துவர்கள்.. மீண்டும் இறங்கி வந்த மம்தா!
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Embed widget