மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,713 கன அடியில் இருந்து 15,710 கன அடியாக அதிகரிப்பு.

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 15,800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 8,268 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 12,713 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 15,710 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,713 கன அடியில் இருந்து 15,710 கன அடியாக அதிகரிப்பு.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 92.58 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 55.64 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 15,800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,713 கன அடியில் இருந்து 15,710 கன அடியாக அதிகரிப்பு.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாணவர்களே ரெடியா!
மாணவர்களே ரெடியா! "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயற்சி.. வந்தது அப்டேட்!
Airtel AI: ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
"விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வணங்குவது போன்றது" உருக்கமாக பேசிய மத்திய அமைச்சர்!
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin on Marina Airshow : ’’இவ்ளோ மக்கள் வருவாங்கனு எதிர்பார்க்கல’’முதல்வர் பரபரKanimozhi on Marina Air show : மெரினா உயிரிழப்பு கனிமொழி பகீர் REACTION!யாரை சாடுகிறார்?Air show in Marina : பறிபோன 5 உயிர்கள்! யார் பொறுப்பு?அரசா? விமானப்படையா?Rahul Gandhi : தலித் வீட்டில் சமையல்!Cooking-ல் அசத்திய ராகுல்!நெகிழ வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவர்களே ரெடியா!
மாணவர்களே ரெடியா! "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயற்சி.. வந்தது அப்டேட்!
Airtel AI: ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
"விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளை வணங்குவது போன்றது" உருக்கமாக பேசிய மத்திய அமைச்சர்!
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
பாஜகவுக்கு கேட் அவுட்.. எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா.. காஷ்மீரில் காத்திருக்கும் ஷாக்
PM Modi Song: பிரதமர் மோடி எழுதிய பாடல்: அடடே.! அற்புதமா இருக்கே.!
பிரதமர் மோடி எழுதிய பாடல்: அடடே.! அற்புதமா இருக்கே.!
பூமியைச் சுற்றும் 2வது நிலா.! நிலாவுக்கு கிடைத்த புது பிரண்டு.! வானியல் அற்புத நிகழ்வு
பூமியைச் சுற்றும் 2வது நிலா.! நிலாவுக்கு கிடைத்த புது பிரண்டு.! வானியல் அற்புத நிகழ்வு
எமனாக வந்த அரசு பேருந்து.. தாயும் மகனும் பரிதாப பலி.. கதறும் கிராம மக்கள்
எமனாக வந்த அரசு பேருந்து.. தாயும் மகனும் பரிதாப பலி.. கதறும் கிராம மக்கள்
கைரேகை வைத்து மேவாட் கொள்ளையனை தூக்கிய போலீஸ்.. தீரன் படம் பாணியில் நடந்த சம்பவம்
கைரேகை வைத்து மேவாட் கொள்ளையனை தூக்கிய போலீஸ்.. தீரன் படம் பாணியில் நடந்த சம்பவம்
Embed widget