TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19.05.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.05.2023 முதல் 22.05.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை :
19.05.2023 & 20.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
கடந்த 24 மணி அதிகபட்சமாக வேலூர் - 41.8 டிகிரி செல்சியஸ், பரமத்தி கரூர் - 41.5 டிகிரி செல்சியஸ், திருத்தணி - 39.6 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் - 39.2 டிகிரி செல்சியஸ், திருச்சி - 39.1 டிகிரி செல்சியஸ், மதுரை - 39 டிகிரி செல்சியஸ், ஈரோடு - 38.8 டிகிரி செல்சியஸ், சேலம் - 38.6 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை - 38.5 டிகிரி செல்சியஸ், சென்னை மீனம்பாக்கம் - 38.4 டிகிரி செல்சியஸ், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் - 38 டிகிரி செல்சியஸ், தர்மபுரி மற்றும் பரங்கிப்பேட்டை - 37.6 டிகிரி செல்சியஸ், காரைக்கால் - 37.2 டிகிரி செல்சியஸ், 36.5 - கோவை டிகிரி செல்சியஸ், சென்னை நுங்கம் பாக்கம் - 36.1 டிகிரி செல்சியஸ், கடலூர் - 35.8 டிகிரி செல்சியஸ், தொண்டி - 35.5 டிகிரி செல்சியஸ், அதிராமபட்டினம் - 34.5 டிகிரி செல்சியஸ், பாம்பன் - 34.4 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடி - 34.1 டிகிரி செல்சியஸ், வால்பாறை - 29 டிகிரி செல்சியஸ், குன்னூர் - 26 டிகிரி செல்சியஸ். கொடைக்கானல் - 21.6 டிகிரி செல்சியஸ், உதகமண்டலம் - 21.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 17 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
TN 10th Result 2023: இன்று வெளியாகிறது 10, பிளஸ் 1 தேர்வு முடிவுகள்... எங்கே? எப்படி பார்ப்பது..?