மேலும் அறிய
Advertisement
Tamil news : வேட்டி தினம் கொண்டாட்டம்...கீழடிக்கு இடம் கேட்பு கூட்டம்... - தென் தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடிய 14 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ. 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
1. ராமநாதபுரத்தில் வருகிற 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ள அரசு மருத்துவக்கல்லூரி கட்டமைப்பு வசதிகளின் முழுமை நிலை குறித்து தேசிய மருத்துவ கவுன்சில் குழு நேரில் வந்து ஆய்வுசெய்து ஒவ்வொரு பிரிவுகளாக புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளது.
2. சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையரிடம் மெரைன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
3. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க விவசாயிகளின் நிலங்களை நேரடி பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்துவது தொடர்பான கூட்டம் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் நிலங்களை கிரையம் கொடுக்க முடியாது எனக்கூறி அனைவரும் கூட்டம் முடியும் முன்பே வெளியேறிவிட்டனர்.
4. ராதாபுரம் அருகே கும்பிகுளம் கல்குவாரி கிடங்கில் குளித்த தாய் பேச்சியமாள் மகன் சுபாஷ் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு. வள்ளியூர் தீயணைப்பு துறையினர் இருவரின் உடல்களையும் மீட்பு .
5. வேட்டி தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணி செய்யும் ஒட்டுமொத்த அதிகாரிகளும் வேட்டி அணிந்து அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
6. தஞ்சை கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர் கணேஷ்க்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
7. தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
8. மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு போதுமானதாக இல்லை. கூடுதல் விவரங்களுடன் முழுமையான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். - மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு. கடலோர பகுதிகளுக்கான எண்ணெய் கசிவு தடுப்பு குழுவை தமிழகத்தில் உடனடியாக ஏற்படுத்த கோரிய வழக்கு. மத்திய, மாநில அரசுகள் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு.
9. மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா, தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காரணத்தால் ரத்து செய்யப்படுகிறது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
10. தூத்துக்குடியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடிய 14 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ. 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion