11 AM Headlines: மெரினாவில் விமான சாகசத்தை காண குவிந்த மக்கள், இந்தியா Vs பாக்., போட்டி - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
11 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகளை வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள்
விமானப்படையின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 72 விமானங்கள் மூலம் 24 வகையான சாகசங்கள் நிகழ்த்தப்படுகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். மேலும், ஏராளமான பொதுமக்களும் விமான சாகசங்களை காண மெரினா கடற்கரையில் குவிந்துள்ளனர்.
டிரேடிங்கில் ரூ.1 கோடியை இழந்த இளைஞர் தற்கொலை
சென்னை பூவிருந்தவல்லி அருகே ஆன்லைன் ட்ரேடிங்கில் ஒரு கோடி வரை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை. சென்னீர் குப்பம் பகுதியைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜெண்ட் வினோத், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் ட்ரேடிங்கில் முதலீடு செய்துள்ளார். தொடர் நஷ்டத்தால் கடன் சுமை அதிகமாக மன உளைச்சலில் தற்கொலை என தகவல்.
ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழைநீர் - பக்தர்கள் அவதி
ராமேஸ்வரம் சுற்றுப்பகுதியில் இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர் புகுந்து பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஜார்க்கண்ட் தேர்தல் - இலவச அறிவிப்புகளை வாரி வழங்கிய பாஜக
ஜார்கண்டில் ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், ஆட்சியை பிடிக்க ஜார்கண்ட் முகிதி மோர்ச்சா மற்றும் பாஜக இடையே கடும் இழுபறி நிலவுகிறது. இந்நிலையில் பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், “18 வயதுக்கு மேலான பெண்களுக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம், ஒரு சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும்” என இலவங்கள் அடுக்கப்பட்டுள்ளன.
ஜானி மாஸ்டருக்கான தேசிய விருதை வாபஸ் பெற்றது விருதுக் குழு
திருச்சிற்றம்பலம் படத்திற்காக நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட, தேசிய விருதை விருதுக்குழு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. பாலியல் புகாரில் சிக்கி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜானி மாஸ்டருக்கான விருது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
திருப்பதி கருட சேவை: ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை இன்று திருப்பதி செல்கிறது
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாள் கருட சேவை அன்று திருப்பதி ஏழுமலையான் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து வீதி உலா வருவது வழக்கம். அதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் இருந்து, ஆண்டாள் சூடிக்கொடுத்தமாலை ந்று திருப்பதி கொண்டு செல்லப்படுகிறது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கமாட்டோம் - ஃப்ரான்ஸ்
இஸ்ரேலுக்கு இனி ஆயுதங்களை வழங்கப்போவதில்லை என, ஃப்ரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் தெரிவித்துள்ளார். காஸா தாக்குதலில் ஸ்ரேலின் நடவடிக்கையை விமர்சித்த அவர், மற்ற நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். ஃப்ரான்ஸின் முடிவு அவமானகரமானது என இஸ்ரேல் சாடியுள்ளது.
இம்ரான் கானின் சகோதரிகள் கைது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் அலீமாகான், உஸ்மாகான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாகாணத்தின் 4 நகரங்களில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக கைது.
அரையிறுதி வாய்ப்பில் நீடிக்குமா இந்திய அணி
மகளிர் டி20 உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெறுவதோடு, அதிக ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற வேண்டியுள்ளது. தவறினால், அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா Vs வங்கதேசம் - இன்று முதல் டி20 போட்டி
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான, முதல் டி20 போட்டி, இன்று இரவு 7 மணிக்கு குவாலியரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார். தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் ஆர்வம் காட்டுகின்றன.