TN Rain Update: தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
TN Rain Update: தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழக மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் அதிக மழைக்கு வாயுப்பு உள்ளதாகவுகவும் கூறியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/AIJ4P8V5F4
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) April 19, 2022
19.04.2022: தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
20.04.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.04.2022: தென் தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை என இருக்கும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) April 19, 2022
கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், நிலைக்கோட்டை, வாள்பாறை மற்றும் சுருளக்கோடு பகுதிகளில் சுமார் 6 மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

