Watch Video: “நீண்ட ஆயுள், ஓங்கு புகழோடு வாழ வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இசையமைப்பாளரும், எம்.பி.யுமான இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இசையமைப்பாளரும், எம்.பி.யுமான இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு திமுக தொண்டர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளரும், எம்.பி.யுமான இளையராஜா தனது வாழ்த்துகளை வீடியொ தெரிவித்துள்ளார். அதில் “நீண்ட ஆயுள், நிறை செல்வம், ஓங்கு புகழோடு வாழ வேண்டும்” என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ”மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... மக்களுக்கு "தி"னமும் "மு"ழு உடல் நலத்துடன் "க"டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இசைஞானி இளையராஜா!https://t.co/wupaoCzH82 | #HBDMKStalin #ilayaraja #mkstalin #dmk @ilaiyaraaja pic.twitter.com/euOqV8bT88
— ABP Nadu (@abpnadu) February 28, 2023