மேலும் அறிய

பலே டெக்னிக்.. கையில் எடுத்த ஐஐடி மெட்ராஸ்.. விஞ்ஞானிகள் சாதனை

மொத்த சுத்திகரிப்பு செலவை 25 சதவீத அளவுக்கு குறைப்பதுடன், ஆர்ஓ உள்கட்டமைப்பு செலவை 75 சதவீதம் குறைக்கும் வகையில் ஜவுளித் தொழிற்சாலைகளின் கழிவுநீரை திறம்பட கையாள்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜவுளித் தொழிற்சாலைகளின் கழிவுநீரை திறம்பட கையாள்வதற்கான மேம்பட்ட புதிய தொழில்நுட்பத்தை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி) உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறது. இந்தத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நீரின் தன்மையையும், தெளிவையும் பாதிப்பது மட்டுமின்றி, ஒளிச்சேர்க்கை செயல்பாட்டைக் குறைத்து, மனிதர்கள், நீர்வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவற்றுக்கும் நச்சு அபாயங்களை ஏற்படுத்துகிறது.

ஐஐடி மெட்ராஸ் விஞ்ஞானிகள் சாதனை:

புதுமையான மின்வேதியியல் அடிப்படையிலான முறையை உருவாக்கி, பூஜ்யநிலை திரவ வெளியேற்ற ஆலைகளின் தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்க, இந்தியாவில் உள்ள ஜவுளித் தொழிற்சாலைகளின் கழிவுநீர் மற்றும் உப்புகளை மீட்டெடுத்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் பூஜ்யநிலை திரவ வெளியேற்ற அமைப்புகளை செயல்படுத்தும் கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், வழக்கமான பூஜ்ஜியநிலை திரவ வெளியேற்ற செயல்முறை அதிக மூலதனம், இயக்க செலவுகள், குறிப்பிடத்தக்க ஆற்றல் நுகர்வு தேவைப்படுகிறது. அத்துடன் வாயுக்களை அளவிடும் செயல்முறைகளும் பெரிய அளவில் அவசியமாகிறது.

கழிவுநீரை சுத்திகரிக்க புதிய திட்டம்:

சென்னை ஐஐடி பேராசிரியை இந்துமதி எம். நம்பி தலைமையில், இந்த முன்னோடித் திட்டம் 2023-ல் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னாங்கல்பாளையம் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் செயல்படுத்தப்பட்டது.

பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் குளோரினேட்டட் மாதிரிகளுடன் ஒப்பிடும்போது, மின்வேதியியல் ஓசோன் ஆக்சிஜனேற்ற அமைப்பு மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களின் குறிப்பிடத்தக்க குறைப்பை இது எடுத்துக் காட்டியது. சாயக் கழிவுநீரில் 96% வண்ண நீக்கத்தையும் 60% ரசாயன ஆக்சிஜன் நீக்கத்தையும் இந்த முன்னோடி அமைப்பு வெற்றிகரமாக செய்து முடித்தது.

தொடக்ககால பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், ஆராய்ச்சி குழுவினர் ஒரு நாளைக்கு 400 லிட்டர் செயலாக்க அமைப்பை விரிவுபடுத்தினர். இந்த சோதனைகள், அமைப்பை நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஏற்ப மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும்:

இந்த புதுமையான மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்த சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறையின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள பொறியியல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியை இந்துமதி எம். நம்பி, "இந்த புதுமையான அணுகுமுறையானது சுத்திகரிப்பு நிலையத்தில் தேவைப்படும் ஆர்ஓ அலகுகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.

இறுதியில் மொத்த சுத்திகரிப்பு செலவையும் 25 சதவீத அளவுக்கு குறைப்பதுடன், ஆர்ஓ உள்கட்டமைப்பு செலவையும் 75 சதவீதம் குறைக்கிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் துணைப் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய குளோரினைப் பயன்படுத்தாமலேயே வண்ணம் மற்றும் கரிம மாசுபடுத்திகளை திறம்பட நீக்க முடிகிறது.

தூய்மையான நீர் வளங்களை எங்களது சுத்திகரிப்பு அமைப்பு ஊக்குவிப்பதுடன் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளையும் ஆதரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்து இருப்பதுடன் ஜவுளித் துறையில் சுற்றுச்சூழல் பொறுப்பையும் மேம்படுத்துகிறது" என்றார்.

இந்தியாவில், ஜவுளித் தொழில் நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தையும், தொழில்துறை உற்பத்தியில் 7 சதவீதத்தையும், ஏற்றுமதி வருவாயில் 12 சதவீதத்தையும் கொண்டுள்ளது. இருப்பினும் உலகளாவிய சுத்தமான நீர் மாசுபாட்டிற்கு இத்தொழில் 20 சதவீதம் பொறுப்பாவதால் இதன் வருவாய் அதிக சுற்றுச்சூழல் செலவினத்துடன் கிடைக்கிறது. குறிப்பாக சாயமிடுதல் மற்றும் இறுதிக்கட்ட செயல்முறைகளால் செலவினம் ஏற்படுகிறது. ஜவுளித் தொழில்களில் இருந்து வரும் கழிவுநீரில் சாயங்கள், சிதறல்கள், கன உலோகங்கள், அமிலங்கள், காரங்கள் உள்ளிட்ட மக்கும் மற்றும் மக்காத பல்வேறு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன.

இந்தோ-ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தால் ஆதரிக்கப்படும் இந்த கூட்டுத் திட்டம், கழிவு நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க அளவு இலக்கை எட்டியுள்ளது. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
Embed widget