Ma subramanian:ஓ.பி.எஸ். சொல்லியிருந்தால் அரசு பாதுகாப்பு வழங்கியிருக்கும்: மா.சுப்ரமணியன் தடாலடி
ஓ.பி.எஸ். சொல்லியிருந்தால் பாதுகாப்பு வழங்கியிருப்போம் என மா.சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் முன்னதாகவே தகவல் தெரிவித்திருந்தால், அவருக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்திருப்போம் என மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் அருகே ஆராய்ச்சிபட்டியில் பேட்டியளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், “அதிமுக தலைமைச் செயலகத்திற்கு ஓ.பி.எஸ். போவதற்கு முன்பு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டிருந்தால் தமிழக அரசு உரிய பாதுகாப்பு கொடுத்திருக்கும். அவர்கள் சொல்லவில்லை. வானகரம் பொதுக்குழுவிற்கு அதிமுகவினர் செல்லும் நிலையில் ஓ.பி.எஸ் அவ்வை சண்முகம் சாலை வழியாக செல்வதாக அவர்கள் சொல்லியிருந்தால் நாங்கள் முன்னெச்சரிக்கையாக எதாவது நடவடிக்கை எடுத்திருப்போம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
என்ன அந்த தீர்மானங்கள்..
1. அதிமுகவின் அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது
2. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்.
3.மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம்.
4.இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
5.நெசவாளர் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
6.அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு செய்தல்
7.எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும் , எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் செயல்பட்ட அரசின் வரலாற்று வெற்றிகளுக்கும் பாராட்டு தெரிவிப்பது.
8.அதிமுகவின் இடைக்கால பொது செயலாளரை, நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுகோள் விடுத்தல்
9.அதிமுக பொது செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட கோரும் தீர்மானம் நிறைவேற்றுதல்
10.அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து கட்சி வளர்ச்சி குறித்து முடிவு எடுத்தல்.
11.அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு செய்தல்
12. அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுதல்
13.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது
14.சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது
15. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்
16. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு கழகத்தினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.
மேலும் செய்திகளை காண,
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்