"வீட்டில தங்கம் சேரனுமா.? இதோ பரிகாரம்!!!
பொன்னவன் மஞ்சள் நிறத்தோன் என்று அழைக்கப்படும் குரு தான் தகதகவென ஜொலிக்கும் தங்கத்திற்கு அதிபதி...

அன்பார்ந்த வாசகர்களே இன்று ஏறி இருக்கக்கூடிய தங்கம் விலைக்கு பணம் இருப்பவர்கள் கூட விலை குறையட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று இருப்பார்கள் போல அந்த அளவிற்கு தங்கத்தின் விலை கூடிக் கொண்டே செல்கிறது சரி நேராக விவரத்தை சொல்லுவோம் ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருப்பது போல தங்கத்திற்கு குரு தான் அதிபதி.
பொன்னவன் மஞ்சள் நிறத்தோன் என்று அழைக்கப்படும் குரு தான் தகதகவென ஜொலிக்கும் தங்கத்திற்கு அதிபதி... சரி ஒருவர் ஏழையாக இருக்கிறார் இந்த பரிகாரத்தை செய்தால் தங்கம் அவரிடம் சேருமா என்றால் பிரபஞ்சத்திற்கு ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை உங்களிடம் அந்த சக்தி இருக்கிறது என்றால் அந்த கர்மாவின் படி அந்த பொருள் உங்களை வந்து சேரும்...
வியாழக்கிழமை மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு உங்கள் வீட்டில் அருகாமையில் இருக்கக்கூடிய நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானை சென்று தீபம் போட்டு வழிபடுங்கள் வியாழக்கிழமை மட்டும் செய்ய வேண்டுமா என்றால் இல்லை உங்களால் வாரத்தில் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் குருவுக்கு உங்களால் முடிந்ததை செய்து மனதார வழிபட்டு வாருங்கள் தங்கத்தை தேடி நீங்கள் போக வேண்டியது இல்லை தங்கம் உங்களைத் தேடி வரும்...
அதேபோல சிவன் ஆலயத்தில் இருக்கக்கூடிய தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் தட்சணாமூர்த்தியின் வழிபாடும் கூட பெருமளவு தங்கத்தினை உங்கள் கைகளில் கொண்டு வந்து சேர்க்கும் குருவானவர் எப்படி உங்களுக்குள் இருக்கும் அறியாமையை நீக்கி வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வருகிறாரோ அதேபோலத்தான் உங்களிடம் இருக்கக்கூடிய வறுமையை நீக்கி உங்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தையும் வாழ்க்கையில் சந்தோசத்தையும் கொண்டு வரப் போகிறார்கள் குரு ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சி உச்சம் போன்ற நல்ல வழிமுறைகளை பெற்று விட்டால் அந்த ஜாதகர்லால் எப்பொழுது வேண்டுமென்றாலும் இது போன்ற தங்கத்தை வாங்க முடியும் நகைக்கடையில் வேலை செய்பவர்களின் ஜாதகத்தை பார்த்து இருக்கிறோம் அவர்களுக்கு குரு ஏதேனும் வகையில் மிகப் பக்கபலமாக அவர்களுக்கு இருந்திருப்பார் அதேபோல மஞ்சள் வண்ணமும் தங்கத்தை கொண்டு வருவதற்கு உங்களுக்கு பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்..
குருவாகப்பட்டவர் பகவான் ஸ்ரீ ராகவேந்த சாய்பாபா போன்றோர் நம்மை வழிநடத்த கூடியவர்களாக நம் வாழ்க்கையில் நமக்கு பெரிய உறுதுணையாக இருக்கக்கூடியவர்களாக இருப்பவர்களையும் நீங்கள் வணங்கி வரலாம் கடுமையான தங்க தோஷம் இருக்கிறது என்றால் வியாழக்கிழமையில் ஒரு பொழுது மட்டும் விரதம் இருக்கலாம் 12 மணிக்கு மேல் ஆதாரங்களை உண்ணலாம் கடுமையான விரதம் என்றால் காலை 6 மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை என்று கூறுவார்கள் ஆனால் குருவுக்கு பட்டினி கிடப்பது பிடிக்காது அவர் உணவுடன் வாழ்பவர் உணவாகவே வாழ்பவர் ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் மூச்சுக்காற்று அவசியம் அப்படிப்பட்ட மூச்சுக்காற்று குருவின் இடத்தில் தான் இருக்கிறது...
சித்தர்கள் நமக்கெல்லாம் குருவாக நம் வாழ்க்கை நடத்தக்கூடிய சக்தி கொண்டவர்களாக விளங்குகிறார்கள் அப்படிப்பட்ட சித்தர் வழிபாடு கூட தங்கத்தை நம்மிடம் வர வைப்பதற்கு ஒரு சிறந்த வழியாக அமைகிறது குறிப்பாக உங்களுடைய வேண்டுதல்களை இறைவனிடம் சமர்ப்பித்து விடுங்கள் தேவையானவற்றை அவர்கள் செய்து கொடுப்பார்கள் இந்த பதிவை பார்க்கும் உங்களுக்கு செய்து பாருங்கள் நிச்சயம் வெற்றிவேல் தேடி வரும் என்று தான் நாம் கூற முடியும்…






















