மேலும் அறிய

Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை

Ration Card : ரேஷன் கார்டு முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஆன்லைனில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம். .

ரேஷன் அட்டையும்- அரசின் திட்டங்களும்

தமிழகத்தில் ரேஷன் கார்டு உணவுப்பொருட்கள் வாங்குவதற்கான அட்டையாக மட்டுமில்லாமல் அடையாள ஆவணமாகவும் ரேஷன் கார்டு உள்ளது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடிக்கும் மேலான குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த அட்டைகளுக்கு அரிசி, பருப்பு, சக்கரை,கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மானிய விலையிலும், இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு, இயற்கை பேரிடரின் போது இழப்பீடும் வழங்கப்படும். அதே நேரம் அரசின் சார்பில் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையான ஆயிரம் ரூபாய் பெறுவதற்கும் ரேஷன் அட்டை முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது.

காத்திருக்கும் 5 லட்சம் பேர்

எனவே ரேஷன் அட்டை வாங்குதற்காக பல லட்சம் பேர் விண்ணிப்பித்து காத்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிய ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்து காத்துள்ளன்னர். சட்டமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்றதால் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணியும், வழங்கும் பணியும் நிறுத்தப்பட்டது. தற்போது புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு ரேஷன் வழங்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக 73 ஆயிரம் பேருக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களுக்கும் ரேஷன் அட்டையானது வழங்கப்படவுள்ளது.

ஆன்லைனில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம்

இந்த நிலையில், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் உடனடியாக ரேஷன் கார்டுகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டவர்களின் உண்மை நிலை கண்டறித்து உடனே ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. எனவே ஆன்லைனில் ரேஷன் கார்டுக்காக ஈசியாக விண்ணப்பிக்கலாம். அந்த வழிமுறையை தற்போது பார்க்கலாம். அந்த வகையில் TNPDS தளத்தில் “புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க” மற்றும் விண்ணப்பத்தின் நிலையைப் பார்க்கும் வசதிகள் உள்ளன.

ஆன்லைனில் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

Step-1
TNPDS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

Step- 2

இணையதளத்தில் முகப்புப் பக்கத்தில் “மின்னணு அட்டை சேவைகள்” என்ற பகுதியை கிளிக் செய்யவும்

 Step-3
அதில் “புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க” என்பதைத் தேர்வு செய்யவும்.

Step- 4
குடும்பத் தலைவரின் விவரங்கள், முகவரி, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், தொடர்பு எண் உள்ளிட்ட கேட்கப்படும் தகவல்களைச் சரியாக உள்ளிடவும்.

Step- 5
கேட்கப்படும் ஆதார ஆவணங்களைப் பதிவேற்றவும். பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் ஆவணங்களில் இருப்பதுடன் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

Step- 6
விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன் அனைத்து தகவல்களையும் ஒருமுறை சரிபார்க்கவும்.

Step- 7
விண்ணப்பத்தை Submit செய்த பிறகு கிடைக்கும் விண்ணப்ப எண் அல்லது Reference Number-ஐ screenshot அல்லது குறிப்பாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலையை எப்படி சரி பார்ப்பது?

TNPDS இணையதளத்திற்குச் சென்று “மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை” என்ற வசதியைத் கிளிக் செய்து, கேட்கப்படும் Reference Number பதிவிட்டு விண்ணப்ப விவரங்களை பதிவு செய்து நிலையைப் பார்க்கலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்? - வானிலை கொடுத்த வார்னிங்
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்? - வானிலை கொடுத்த வார்னிங்
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget