மேலும் அறிய

பள்ளி கட்டிடம் கட்டுமான பணியின் போது விபத்து - வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

முதல் கட்ட விசாரணையில் சென்ட்ரிங் சரியாக அமைக்காதது இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஒசூர் அருகே தனியார் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியின் போது மேற்கூரை சரிந்து  2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்தனர்.
 
கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் தாலுகாவில் பேடர்ஹல்லி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி கட்டடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானம் பணியை கர்நாடக மாநில ஹோசாகோட்டை பகுதியில் சேர்ந்த பிரதாப் பில்டர்ஸ் மேற்கொண்டு வருகிறது.
 
இந்த நிலையில், முதல்தளம் சிமெண்ட்  கான்கிரீட்  மோல்டிங் போடப்பட்டுள்ளது. இன்று  இரண்டாவது தளம் கான்கிரீட் மோல்டிங் போடும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதில் வட மாநிலத்தை  சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 100 பேர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர்
 
இரண்டாவது தளத்தில் இன்று கம்பி கட்டப்பட்டு  கான்கிரீட் மோல்டிங் போட்டுக் கொண்டிருந்தபோது அதிக பாரம் காரணமாக  எதிர்பாராத விதமாக கான்கிரீட் மோல்டிங்  சரிந்து விபத்து ஏற்பட்டது.
 
அப்போது அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கி 16 பேர் படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 5 பேர் கவலைக்கிடமாக இருந்ததால் அவர்களை பெங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி கட்டிடம் கட்டுமான பணியின் போது விபத்து - வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு
 
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார் ஜேசிபி வாகனம் மூலம் மீட்பு  பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு  வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் கவலைக்கிடமாக பெங்களுர் மருத்துவமனைக்கு சென்ற 5 பேரில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி  பரிதாமக  உயிரிழந்தனர். இறந்தவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மின்னர் பிஸ்வாஸ்,  ஜாகித் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
 
முதல் கட்ட விசாரணையில் சென்ட்ரிங் சரியாக அமைக்காதது இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் பள்ளி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

தலைப்பு செய்திகள்

ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா? - மது குடித்து வந்தால் என்ன தண்டனை தெரியுமா? - மகிழ்ச்சியில் பெண்கள்
தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா? - மது குடித்து வந்தால் என்ன தண்டனை தெரியுமா? - மகிழ்ச்சியில் பெண்கள்
Today Top Five News : 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Today Top Five News : 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Chennai OMR Makeover: லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து, சைக்கிள் டிராக், மாஸ்டர் பிளான்!
லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து,மாஸ்டர் பிளான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget