அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? – சாடிய உயர்நீதிமன்றம்
பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்

பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது எனத் தெரிவித்தார். மேலும், அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? என கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் இன்று மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

