தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மைய அறிவிப்பு சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், மேலும் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று 10 மாவட்டங்களில் மழை:
தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று (மே 26) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று மே(26) கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 26, 2022
நாளை 16 மாவட்டங்களில் கனமழை:
தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை , திருப்பத்தூர்,வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், தருமபுரி, சேலம், திண்டுக்கல்,திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 16 மாவட்டங்களிலும் நாளை (மே 27) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 26, 2022
சென்னை:
சென்னையை பொறுத்தவரை இன்று (மே26) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:
தமிழ்நாடு பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இன்றும் நாளையும் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: இந்தியாவில் உள்ள உயரமான 6 நீர்வீழ்ச்சிகள் குறித்து தெரிந்து கொள்வோம்
மழை பதிவு:
தமிழ்நாட்டில் கடந்த 24 நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 9 செ,மீ அளவும், சோழவந்தான் , நடுவட்டம், தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 6 செ.மீ அளவும் மழை பெய்து உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்