மேலும் அறிய
Advertisement
TN Rain Alert: வெளிய கெளம்பிட்டீங்களா? இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
24.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26.09.2023 முதல் 29.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
உதகமண்டலம் (நீலகிரி), பல்லடம் (திருப்பூர்) தலா 6, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), துறையூர் (திருச்சி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 5, புலிப்பட்டி (மதுரை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சிவகங்கை, பெரியகுளம் AWS (தேனி), நாகுடி (புதுக்கோட்டை), வட்ராப் (விருதுநகர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 4, தேவாலா (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பாடலூர் (பெரம்பலூர்), எமரலாடு (நீலகிரி), கொடநாடு (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), பார்வூட் (நீலகிரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), சித்தார் (கன்னியாகுமரி), கிண்ணக்கொரை (நீலகிரி), தேவிமங்கலம் (திருச்சி) தலா 3, வைகை அணை (தேனி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), பாலமோர் (கன்னியாகுமரி), புவனகிரி (கடலூர்), நத்தம் (திண்டுக்கல்), ஏத்தாப்பூர் (சேலம்), பாண்டவையார் (திருவாரூர்), மணம்பூண்டி (விழுப்புரம்), தலைவாசல் (சேலம்), சிங்கம்புணரி (சிவகங்கை), தாளவாடி (ஈரோடு), அவலாஞ்சி (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), ஆனைமடுவு அணை (சேலம்), பெரியார் (தேனி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), கெட்டி (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
26.09.2023 மற்றும் 27.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion