மேலும் அறிய
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
இதுதவிர வங்கக்கடலில் புயல் உருவாகிவரும் காரணத்தால் வடதமிழகக் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மழை
கோடை வெப்பம் காரணமாகத் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழையும், ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதவிர வங்கக்கடலில் புயல் உருவாகிவரும் காரணத்தால் வடதமிழகக் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read: மழை, டீ, இளையராஜா பாடல்கள்.. சர்வதேச தேநீர் தினம் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















