மேலும் அறிய

Mettur Dam: கனமழை எதிரொலி... மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,196 கன அடியாக அதிகரிப்பு.

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 17,596 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 15,531 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 16,196 கன அடியாக அதிகரித்துள்ளது.

Mettur Dam: கனமழை எதிரொலி... மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,196 கன அடியாக அதிகரிப்பு.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 92 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 54.96 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: கனமழை எதிரொலி... மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,196 கன அடியாக அதிகரிப்பு.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: சென்னை மக்களுக்கு வந்த நல்ல சேதி - ”அதி கனமழை குறையும்” தமிழ்நாடு வெதர்மேன் போட்ட டிவீட்
TN Rain Alert: சென்னை மக்களுக்கு வந்த நல்ல சேதி - ”அதி கனமழை குறையும்” தமிழ்நாடு வெதர்மேன் போட்ட டிவீட்
"சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்” போக்குவரத்து துறை அறிவிப்பு..!
“சென்னை மக்களே ரிலாக்ஸ்”  அதி கன மழைக்கு இனி வாய்ப்பு இல்லை..!
“சென்னை மக்களே ரிலாக்ஸ்” அதி கன மழைக்கு இனி வாய்ப்பு இல்லை..!
TN Rain News LIVE: சென்னையில் இன்று வழக்கம்போல் MTC பேருந்து சேவை
TN Rain News LIVE: சென்னையில் இன்று வழக்கம்போல் MTC பேருந்து சேவை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi Angry | ’’இதுதான் உங்க லட்சணமா?’’LEFT & RIGHT வாங்கிய பொன்முடிநடுங்கிப்போன அதிகாரிகள்Dr Sharmika Slams TN Police |”1000 ரூபா FINE-ஆ?”பொங்கி எழுந்த ஷர்மிகா!U TURN அடித்த TRAFFIC போலீஸ்!TVK Vikravandi Maanadu  | ”மாநாடு நடக்குமா புஸ்ஸி?” புலம்பி தள்ளும் விஜய் ஆரம்பமே சறுக்கலா?Chennai rain : வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு! அடுத்த 2 நாட்களுக்கு... வானிலை மையம் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: சென்னை மக்களுக்கு வந்த நல்ல சேதி - ”அதி கனமழை குறையும்” தமிழ்நாடு வெதர்மேன் போட்ட டிவீட்
TN Rain Alert: சென்னை மக்களுக்கு வந்த நல்ல சேதி - ”அதி கனமழை குறையும்” தமிழ்நாடு வெதர்மேன் போட்ட டிவீட்
"சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்” போக்குவரத்து துறை அறிவிப்பு..!
“சென்னை மக்களே ரிலாக்ஸ்”  அதி கன மழைக்கு இனி வாய்ப்பு இல்லை..!
“சென்னை மக்களே ரிலாக்ஸ்” அதி கன மழைக்கு இனி வாய்ப்பு இல்லை..!
TN Rain News LIVE: சென்னையில் இன்று வழக்கம்போல் MTC பேருந்து சேவை
TN Rain News LIVE: சென்னையில் இன்று வழக்கம்போல் MTC பேருந்து சேவை
Chembarambakkam Lake: செம்பரம்பாக்கத்தில் இருந்து வந்த ஆறுதல் செய்தி.. நீர்வரத்து எப்படி இருக்கு ?
செம்பரம்பாக்கத்தில் இருந்து வந்த ஆறுதல் செய்தி.. நீர்வரத்து எப்படி இருக்கு ?
Rasi Palan Today Oct 16: தனுசுக்கு குடும்பத்தினரிடம் ஒத்துழைப்பு; மகரத்துக்கு வெற்றி- உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today: தனுசுக்கு குடும்பத்தினரிடம் ஒத்துழைப்பு; மகரத்துக்கு வெற்றி- உங்கள் ராசிக்கு என்ன பலன்?
தொடரும் மழை.. பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் செய்யவேண்டியது என்ன ? 
தொடரும் மழை.. பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் செய்யவேண்டியது என்ன ? 
Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் இன்று மின் தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?
Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் இன்று மின் தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?
Embed widget