மேலும் அறிய

TN Rain Alert: மக்களே! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - தலைநகர் சென்னையில் எப்படி?

தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. அதன்படி கேரள மற்றும் பிற மாநிலங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பதிவாகி வருகிறது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி:

தெற்கு ஆந்திர -  வடதமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும்,  தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில், ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள்,   திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எப்படி?

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 24  மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் வெப்பநிலை இயல்பை ஒட்டி தான் இருக்கிறது. நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது. நேற்று மாலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெரினா கடற்கரை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, கிண்டி, மடிப்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பதிவானது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Illicit Liquor : ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் ?” 3 பேர் சாவுக்கு உண்மையான காரணம் என்ன ?
Illicit Liquor : ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் ?” 3 பேர் சாவுக்கு உண்மையான காரணம் என்ன ?
EPS Condemns: ஆறாய் ஓடும் கள்ளச்சாராயம் - கள்ளக்குறிச்சியில் 5 பேர் பலி? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
EPS Condemns: ஆறாய் ஓடும் கள்ளச்சாராயம் - கள்ளக்குறிச்சியில் 5 பேர் பலி? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Breaking News LIVE: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் ராகுல்காந்தி
Breaking News LIVE: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் ராகுல்காந்தி
NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Snake in Amazon Parcel | அமேசான் பார்சலில் விஷப்பாம்பு!அதிர்ச்சியில் பெங்களூரு தம்பதி..வைரல் வீடியோPTR inaugurates public toilets | ”எங்கடா இங்கிருந்த TOILET”அதிர்ந்து போன PTR முழித்த அதிகாரிகள்Dad Beaten by Son | தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் பதற வைக்கும் காட்சி! நடந்தது என்ன?Bird Flu | பரவியதா பறவை காய்ச்சல் கொத்து,கொத்தாக மடியும் காகங்கள் அதிர்ச்சி காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Illicit Liquor : ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் ?” 3 பேர் சாவுக்கு உண்மையான காரணம் என்ன ?
Illicit Liquor : ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் ?” 3 பேர் சாவுக்கு உண்மையான காரணம் என்ன ?
EPS Condemns: ஆறாய் ஓடும் கள்ளச்சாராயம் - கள்ளக்குறிச்சியில் 5 பேர் பலி? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
EPS Condemns: ஆறாய் ஓடும் கள்ளச்சாராயம் - கள்ளக்குறிச்சியில் 5 பேர் பலி? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Breaking News LIVE: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் ராகுல்காந்தி
Breaking News LIVE: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் ராகுல்காந்தி
NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
NEET Protest : நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
”காதலே, தனிப்பெருந்துணையே..” புற்றுநோயால் இறந்த மனைவி.. ஐபிஎஸ் அதிகாரி எடுத்த சோக முடிவு..
12th Revaluation Result 2024: வெளியான பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
வெளியான பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
Online Delivery Cobra: மக்களே உஷார்..! அமேசான் டெலிவெரியில் வந்த விஷ நாகம் - இணையத்தில் பரவும் பாம்பு வீடியோ
மக்களே உஷார்..! அமேசான் டெலிவெரியில் வந்த விஷ நாகம் - இணையத்தில் பரவும் பாம்பு வீடியோ
Embed widget