Heavy Rain Alert : ஓயாமல் கொட்டும் மாமழை.. தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. அப்டேட்ஸ் இங்கே
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. அதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், பருவமழை தொடங்கியது முதல் மழை தீவிரம் அடைந்தது.
கடந்த ஓரிரு தினங்களாக சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை மிரட்டி வரும் நிலையில், இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 1, 2022
கடந்த 24 மணிநேரத்தில் செங்குன்றத்தில் 13 செ.மீட்டரும், பெரம்பூரில் 12 செ.மீட்டரும், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் 10 செ.மீட்டரும், அயனாவரம், நுங்கம்பாக்கம், சோழவரத்தில் 8 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
1 of 3: RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-11-02-06:17:43 அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக pic.twitter.com/cthctpLC2L
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 2, 2022
2 of 3: ஆலந்தூர்,அமைந்தக்கரை,அயனாவரம்,செய்யூர்,எழும்பூர்,கிண்டி,மதுராந்தகம்,மதுரவாயல்,மாம்பலம்,மயிலாப்பூர்,பெரம்பூர்,புரசைவாக்கம்,சோழிங்கநல்லூர்,ஸ்ரீபெரும்புதூர்,தாம்பரம்,திருக்கழுகுன்றம்,திருவள்ளூர்,திருவொற்றியூர்,தண்டையார்பேட்டை,வேளச்சேரி,அம்பத்தூர்,மாதவரம்
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 2, 2022
3 of 3: பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 2, 2022
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆலந்தூர், அமைந்தகரை, அயனாவரம், எழும்பூர், கிண்டி, தி.நகர், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அபாயம் காரணமாக ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.