மேலும் அறிய
Advertisement
பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சொன்னது என்ன?
பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். - சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் பொது சுகாதாரத் துறை சார்பில் இன்று 37 வது கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகரில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொடர்ந்து தடுப்பூசி சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்தில் தான் மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி 5.38கோடி பேருக்கு தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 96.50% பேர் முதல் தவணை, 91.10% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். அதேபோல, முன்னெச்சரிக்கை தடுப்பூசி 4.25 கோடி பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 80,705 பேர் மட்டுமே முன்னெச்சரிக்கை தவனை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது அவசியமானது. 50ஆயிரம் முதல் 1லட்சம் வரையில் சில நாடுகளில் கொரோனா தொற்று உறுதியாகிறது, கேரளாவில் 2,500க்கும் மேற்பட்டோருக்கு நேற்று மட்டும் பாதிப்பு உறுதியாகியுள்ளது. செப்.30ம் தேதிக்குள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். அதனை பயன்படுத்தி மக்கள் இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும்.
மக்கள் தயக்கம் காட்டாமல் விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். சென்னையில் 99.12% முதல் தவணை, 87.17% இரண்டாம் தவணை தடுப்பூசி சென்னையில் செலுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு தடுப்பூசி போடும் பணியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி இலவசம் தொடருமா அல்லது தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்த ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் இலவச தடுப்பூசி தொடருமா ? என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும். அக்டோபர் முதல் தடுப்பூசி செலுத்துவதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செலுத்தப்படும் தடுப்பூசிகள் புதன்கிழமைகளில் போடப்படும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாக, 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 8,713 துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், சென்னையில் உள்ள 159 நகர்புற சுகாதார நிலையங்களில், 292 வட்டார மருத்துவமனைகளிலும், 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தமாக 11,333 அரசு மருத்துவமனைகளில் அக்டோபர் முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து தடுப்பூசிகளும் செலுத்தப்படும். பிறந்த குழந்தை முதல், முதியவர்களுக்கு வரை என 13 வகையான தடுப்பூசிகளும் செலுத்தப்படும். அடுத்த வாரம் நடைபெறும் 38-வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் கடைசி தடுப்பூசி முகாமாக இருக்க வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் மெகா தடுப்பூசி முகாம் நிறைவு. அதன் பின் பூஸ்டர் டோஸ் தப்பூசிக்கு சலுகை கிடைக்குமா என்பது தெரியவில்லை என அவர் கூறினார்.
தமிழகத்தில் 1,044 பேர்கள் influenza காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பரவலுக்காக விடுமுறை வழங்க வேண்டுமானால், 365 நாட்களும் விடுமுறை வழங்கி குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டியது தான் எனவும், இதனால் தலைவர்கள் அறிவிப்பு வெளியிடும் பொழுது ஆராய்ந்து வெளியிட வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கைக்கு பதிலளித்த அவர், அடுத்த வாரம் முதல் சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion