மேலும் அறிய
Advertisement
Today Headlines: நேற்றைய நாள் முழுவதும் பரபரப்பு.. இன்றைய நாள் எப்படி? காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!
Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- 13 மணிநேர சோதனைக்கு பின் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் பொன்முடி
- குட்கா முறைகேடு வழக்கில் 11வது முறையாக வாய்தா வாங்கிய சிபிஐ; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் ரவியின் அனுமதி கிடைக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் தகவல்
- ஆளுநரும், அமலாக்கத்துறையும் சேர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் வேலையை எங்களுக்கு சுலபமாக்கி இருக்கிறது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி
- தமிழ்நாட்டில் வகுக்கும் திட்டங்கள்தான் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்- சிறை மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு
- சென்னை அருகே கடன் பிரச்சனையால் விபரீத முடிவு: மனைவி, குழந்தையை கொன்று விட்டு ஐ.டி.ஊழியர் தற்கொலை முயற்சி
- அமலாக்கத்துறை விசாரணை முடிந்து அங்கிருந்து அதிகாலை புறப்பட்டார் அமைச்சர் பொன்முடி. மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராக அமலாக்க துறை உத்தரவு
- கோவை குற்றாலம் இன்று திறப்பு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
இந்தியா:
- பாட்னாவைத் தொடர்ந்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 26 கட்சி தலைவர்கள் பங்கேற்பு
- அஜித் பவார் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த என்சிபி எம்எல்ஏக்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று சரத் பவாரை சந்தித்து பேசினர்.
- 40,800 சதுர மீட்டர் பரப்பளவில் போர்ட் பிளேயரின் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
- வெளிவிவகாரங்கள் துறை அமைச்சர் ஜெய்சங்கர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரையன் உள்பட 11 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- மனநலம் பாதிக்கப்பட்ட 55 வயதான லூசி மாரிங் என்ற நாகா பெண், இம்பால் கிழக்கு பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வருமான வரி தாக்கலுக்கு காலக்கெடு நீடிக்கப்படாது என மத்திய வருவாய் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
உலகம்:
- துனீசியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 108 பேர் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளனர்.
- ஆப்கானிஸ்தானின் பிரபல பாடகி ஹசிபா நூரி பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை.
- இத்தாலியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
- புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்கும் ஒரு புது முயற்சியாக, ஹாங் காங்கில் புகைப்பிடிப்பவர்களை மக்கள் உற்று நோக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
- பிரான்சில் பால்கனியின் நின்று கொண்டிருந்த பெண்ணின் இடுப்பு மீது எரிகல் ஒன்று வந்து விழுந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
விளையாட்டு:
- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் கோலி, தனது 500வது சர்வதேச போட்டியில் களமிறங்குகிறார்.
- கொரியா ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் கலந்து கொள்கிறார்.
- ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இணைக்கு தங்க பதக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion