Climate Change : 30 ஆண்டுகளில் தீவுகளாக மாறும் சென்னை.. வெளியான ஆய்வறிக்கை.. ஆலோசித்த எம்பி, எம்எல்ஏக்கள்!
ஆலோசனைக் கூட்டத்தில் கால நிலை மாற்றத்தால் தமிழகம் சந்திக்கும் பல பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன.
காலநிலை மாற்றம் குறித்து காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு ( The Intergovernmental Panel on Climate Change ) சில ஆய்வறிக்கைகளை வெளியிட்டது. அந்த அறிக்கைகள் மூலம் தமிழ்நாட்டிற்கு சொல்லும் எச்சரிக்கைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கால நிலை மாற்றத்தால் தமிழகம் சந்திக்கும் பல பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னை அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில் தீவுகளாக மாறும் என்றும், தமிழ்நாடு வெள்ளம், வறட்சி போன்ற பிரச்னைகளை தொடர்ந்து சந்திக்கும் என ஆய்வறிக்கை குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பாக தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், ''காலநிலை மாற்றத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடிய உலகளவிலான 12 நகரங்களில் சென்னையும் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து மிகக் குறைவான உயரத்தில் இருக்கும் சென்னை அடுத்த 30, 40ஆண்டுகளில் குட்டித் தீவுகளாக மாறலாம் என்றார்.கூட்டத்தில் பேசிய பலரும் தங்களது கருத்துகளை அழுத்தமாக முன்வைத்தனர்.
காலநிலை மாற்றம் குறித்து @IPCC_CH வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகள் தமிழ்நாட்டிற்கு சொல்லும் எச்சரிக்கைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. pic.twitter.com/8U2CX6zd5L
— Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் (@poovulagu) April 20, 2022
பூவுலகின் நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், கனிமொழி, ,அமைச்சர் சிவசங்கர். சட்டமன்ற உறுப்பினர்கள் ஜிவாஹிருல்லா, வேல்முருகன், எழிலன், வெங்கடேஷ்வரன், அருள், ராஜா, எஸ்.எஸ்.பாலாஜி, சிந்தனைச்செல்வன், சதன் திருமைலைக்குமார், ரகுராமன், திருமகன் ஈ வெ ரா ஆகியோரும் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன்,
நர்த்தகி நடராஜன் விஜயபாஸ்கரன், சீனிவாசன், சிவராமன், டிஆர்பி ராஜா உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
"எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டே முன்னெடுத்து வரும் அரசாக திமுக விளங்குகிறது. போக்குவரத்து, உணவு உற்பத்தி, மின்சார உற்பத்தி என எல்லாத்துறைகளிலும் காலநிலைக்கு இசைவான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்" - @TRBRajaa pic.twitter.com/SoA3eWHHFj
— Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் (@poovulagu) April 20, 2022
"காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது விளிம்புநிலை மக்கள்தான. கஜா புயலின்போது அந்த பாதிப்புகளை நான் நேரில் உணர்ந்தேன். காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றுவோம்" - அமைச்சர் @SMeyyanathan #DeclareClimateEmergency pic.twitter.com/AOfKCTRdsv
— Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் (@poovulagu) April 20, 2022
"ஒன்றிய அரசிடம் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தடுப்பற்கான தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை. இந்தியாவிற்கே இதில் முன்னோடியாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டிய அவசியமுள்ளது" @KanimozhiDMK pic.twitter.com/V2ywtVH0GD
— Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் (@poovulagu) April 20, 2022
காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை முன்வைப்பவர்கள் அனைவரும் உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு தகவமைப்புத் திட்டங்களை வகுப்பது அவசியம் - திட்டக்குழுத் தலைவர் ஜெயரஞ்சன். pic.twitter.com/WYOL4tsXpJ
— Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் (@poovulagu) April 20, 2022