மேலும் அறிய

"பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமாக கையாள வேண்டும்..!" ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தல்..!

பெண் குழந்தைகள் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ளவே கூடாது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ப்ரிம்ரோஸ் ஹவுஸில் மனிதநேய விருதுகள் 2022  வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. சமூக ஆர்வலரும் அரசியல்வாதியுமான அப்சரா ரெட்டியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், அவர்கள் சிறப்பாக சேவையாற்றிவர்களுக்கு மனிதநேய விருதுகளை வழங்கினர். 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசும்போது, " குழந்தைகள் எப்பொழுதும் தங்களது மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்க கூடாது. வாழ்க்கை என்பது வாழ்வதற்காக மட்டுமே முடித்து வைப்பதற்கு அல்ல. குழந்தைகள் கண்ணாடி கோப்பையை போன்றவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகளை ஆசிரியர்கள்  கவனமுடன் கையாள வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் மற்றும் தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க வேண்டும். குழந்தைகள் சாதிக்க பிறந்தவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளவே கூடாது."

இவ்வாறு அவர் பேசினார். 

மனித நேயம் விருதுகள் 2022 விருதுகள், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பணியாற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு தொழில் மற்றும் தொழில் திறன்களைக் கண்டறிய விருதுகள் வழங்கப்பட்டன. மருத்துவர் உஷா ஸ்ரீராம், கன்னிகோவில் ராஜா, செல்வராஜ், அருணாச்சலம், குர் ஆர்யேஹ் எமி, பொன்னி, பிரியா பாபு, சந்திரன், செந்தமிழ் செல்வி, நைரா, ரூபா செல்வநாயகி, உள்ளிட்டோருக்கு மனிதநேய விருதுகள்   வழங்கப்பட்டன.

விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்து பேசிய அப்சரா ரெட்டி, " தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான விருதுகள் பிரபலமான முகங்கள் மற்றும் கவர்ச்சியான வேலைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில்  மக்களின் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயல்படும் சமூகங்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளை உருவாக்க  முயற்சியில் உண்மையான கடின  உழைப்பை வழங்குகின்றவர்களுக்கு இந்த விருதுகள்  வழங்கப்படுகின்றன.

அதிக பிரபலம் இல்லாத  தன்னார்வலர்களின் துணிச்சலான பணியை  அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இது போன்ற விருதுகள் வழங்குவதன் மூலம் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது." என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
"சர்ப்ரைஸ் இருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
Embed widget