மேலும் அறிய

Governor RN Ravi: 'திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை’ .. திமுகவை மீண்டும் சீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி..

திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்துள்ள அவரிடம், “சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது நீங்கள் வெளியேறியதும், முக்கிய தலைவர்களின் பெயரை குறிப்பிடாததும் சரியா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 2022 ஆம் ஆண்டு சட்டபேரவையில் முதன்முறையாக நான் பேசுவதற்கு முன்பு,  தேசிய கீதம் இசைக்க மாட்டோம் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஆனால் நான் உரையாற்றுவதற்கு முன், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

மேலும் ஆளுநர் வரும்போதும், புறப்படும் போதும் தமிழ் தாய் வாழ்த்து, தேசியகீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும். நான் வற்புறுத்திய போதிலும், அவர்கள் பேசுவதற்கு முன் தேசிய கீதத்தை இசைக்காமல் புறப்படும் நேரத்தில் இசைத்தனர். இந்தமுறை சபாநாயகர் என்னை அழைக்க வந்தபோது, முறைப்படி, மீண்டும் கோரிக்கை வைத்தேன். நாடாளுமன்றம்,  அனைத்து மாநில சட்டசபைகளிலும் தேசிய கீதம் மதிக்கப்படுகிறது. அவரிடம் வாய்மொழியாகக் கேட்டதோடு மட்டுமல்லாமல் நானும் ஒரு கடிதம் அனுப்புகிறேன் என்று சபாநாயகரிடம் சொன்னேன். அதன்படி அவருக்கும், முதல்வருக்கும் கடிதம் அனுப்பினேன். ஆனாலும் தேசிய கீதம் இசைக்கவில்லை.

அதேசமயம் அரசு முன்வைக்கும் உரையை பொறுத்தவரை, அது அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். ஆனால் என்னிடம் கொடுக்கப்பட்ட உரையில், அது கொள்கைகளாகவோ, திட்டங்களோவோ இல்லாமல் பிரச்சாரம் செய்வது போல இருந்தது. இது தவறானது. மேலும் பொய்யாக இருந்தது. சட்டம்-ஒழுங்கை பொறுத்தவரையில் தமிழகம் 'அமைதியின் பூங்கா' என்றார்கள்.நான் சில விஷயங்களை மேற்கோள் காட்டினேன். 

திராவிட மாடல் 

அவர்கள் நான் திராவிட ஆட்சி முறையைப் பாராட்டி ஆதரிக்க வேண்டும் என்று விரும்பினர். முதலாவதாக, அத்தகைய மாதிரி ஆட்சிமுறை இங்கு எதுவும் இல்லை. இது ஒரு அரசியல் முழக்கம் மட்டும் தான். காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு முயற்சி மட்டுமே உள்ளது.  'ஒரே பாரதம், ஒரே இந்தியா' என்ற கருத்தை ரசிக்காத ஒரு சித்தாந்தம் திராவிட மாடல் சித்தாந்தம்.

தேசிய சுதந்திர போராட்டத்தை சுட்டிக் காட்டும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுதந்திரப் போராளிகள், தங்கள் உயிரையும் எல்லாவற்றையும் கொடுத்த வரலாறு மற்றும் நினைவிலிருந்து எப்படி அழிக்க முற்படுகிறது?.  மாறாக மொழி, இனவெறியை செயல்படுத்தும் கொள்கையாளர்களை அது மகிமைப்படுத்துகிறது.

சமீபத்திய பட்ஜெட் உரையில் மற்ற மொழிகளை தவிர்த்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட கலைஞர் நூலகத்தை அரசு அமைக்கப் போகிறது என கூறப்பட்டுள்ளது. இது பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் சூழல் அமைப்பை உருவாக்கிய ஒரு கருத்தியல் ஆகும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். 

முன்னதாக நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடியது. அப்போது ஆளுநர் ரவி  தனது உரையின்போது, அறிக்கையில் இடம் பெற்றிருந்த “திராவிட மாடல் அரசு” என்ற வார்த்தையை தவிர்த்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget