மேலும் அறிய

Governor RN Ravi: மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களின் கண்ணீர் கதைகளை கேட்டு நெகிழ்ந்த ஆளுநர்; ரூ.18 லட்சம் ஊக்கத்தொகை

இந்திய, இலங்கை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ. 18 லட்சம் ஊக்கத்தொகையை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

சென்னை வந்துள்ள இந்திய, இலங்கை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் ஆளுநரை ராஜ்பவனில் சந்தித்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்:

சென்னையில் இந்தியா, இலங்கை இடையே நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான  சர்வதேச டி20 சீரிஸ் கிரிக்கெட் போட்டியில் முதலிரண்டு இடங்களில் வென்ற இலங்கை, இந்திய அணி வீரர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (24.02.2023) சந்தித்துப் பேசினர்.

டி-20 சீரீஸில் பங்கேற்க இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றின் ஏற்பாட்டின் பேரில் சென்னை வந்த இவர்கள், ராமச்சந்திரா பல்கலைக்கழக கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 23, 24ல் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றனர்.


Governor RN Ravi: மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களின் கண்ணீர் கதைகளை கேட்டு நெகிழ்ந்த ஆளுநர்; ரூ.18 லட்சம் ஊக்கத்தொகை

சோதனையான வாழ்க்கையை மீறி சாதித்துவரும் அவர்களின் வாழ்க்கை நிலை பற்றி கேள்விப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இரு அணி வீரர்களையும் பார்க்க விரும்பி அவர்களை ராஜ்பவனுக்கு இன்று மாலை அழைத்திருந்தார். ஆளுநர் மாளிகை தர்பார் மண்டபத்தில் இரு அணிகளைச் சேர்ந்த தலா 18 வீரர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.

கண்ணீர் கதை:

அப்போது இரு தரப்பு வீரர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சவாலான வாழ்க்கை சூழல் குறித்தும் வறுமை நிலையிலும் விளையாட்டு மீதான ஆர்வத்தால் கிரிக்கெட் விளையாட வந்துள்ளதையும் கூறினர்.

ஒரு சில வீரர்கள், தங்களுக்கு அன்றாடம் மூன்று வேலை உணவு கூட கிடைப்பது நிச்சயமில்லாத நிலையில் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர். தற்போது வீட்டுக்குப் போனால் அங்கு சாப்பாடு இருக்குமா என்பது கூட கேள்விக்குறிதான் என்று வேதனையுடன் கூறினர். ஒரு கிரிக்கெட் வீரர் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். இத்தனை ஆண்டுகளில் மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர் எங்களை அழைத்து மரியாதையாக எங்கள் குறைகளை காது கொடுத்து கேட்பது இதுதான் முதன்முறை என்று குறிப்பிட்டார்.

ரூ. 18 லட்சம் உதவி:

இரு அணி வீரர்களின் பிரச்னைகளை கேட்டறிந்த ஆளுநர், அவர்களின் வாழ்க்கைச் சூழலை எண்ணி உணர்ச்சி வசப்பட்டார். உடனடியாக அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆளுநர் தரப்பு நிதியில் இருந்து முதலிடம் வென்ற இலங்கை அணிக்கு ரூ. 10 லட்சமும், 2-ம் இடத்திற்கு வந்த இந்திய அணிக்கு ரூ. 8 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிட்டார். 


Governor RN Ravi: மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களின் கண்ணீர் கதைகளை கேட்டு நெகிழ்ந்த ஆளுநர்; ரூ.18 லட்சம் ஊக்கத்தொகை

ஆளுநரின் அறிவிப்பால் நெகிழ்ச்சியடைந்த இந்திய, இலங்கை வீரர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். நீங்கள் அனைவரும் புதிய உற்சாகத்துடனும்,  உத்வேகத்துடனும் செயல்பட்டு, அவரவர் தாய் நாட்டுக்கு பெருமை தேடித்தர வேண்டும் என்று ஆளுநர் ரவி வாழ்த்தினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget