புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்! ராஜமுந்திரிக்கு புதிய விமான சேவை: இனி ஏனாமுக்கும் விமானம்! முழு விபரம் இதோ!
புதுச்சேரியிலிருந்து ராஜமுந்திரிக்கு புதிய விமான சேவை இன்று முதல் தொடக்கம்- விமான நேரங்கள் மாற்றம்.

புதுச்சேரியிலிருந்து ராஜமுந்திரிக்கு புதிய விமான சேவை
புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து இண்டிகோ நிறுவனத்தின் மூலம் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு தினந்தோறும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. 80 பேர் பயணம் செய்யும் இந்த விமான சேவைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, புதுவையிலிருந்து கூடுதல் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை தினந்தோறும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இணைப்பின் மூலம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பகுதியான ஏனாமுக்கு விமான சேவை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையை முன்னிட்டு, புதுச்சேரிக்கு வந்து செல்லும் விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
புதிய விமான நேர அட்டவணை (தினமும்):
ராஜமுந்திரி - ஹைதராபாத்:
காலை 10:05 மணி: ராஜமுந்திரியில் இருந்து புறப்படும் விமானம், காலை 11:20 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.
ஹைதராபாத் - புதுச்சேரி:
காலை 11:50 மணி: ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 1:45 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.
புதுச்சேரி - பெங்களூரு:
பிற்பகல் 2:05 மணி: புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 3:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
பெங்களூரு - புதுச்சேரி:
பிற்பகல் 3:55 மணி: பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, மாலை 5:20 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.
புதுச்சேரி - ஹைதராபாத்:
மாலை 5:40 மணி: புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு, இரவு 7:25 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.
ஹைதராபாத் - ராஜமுந்திரி:
இரவு 7:55 மணி: ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9:10 மணிக்கு ராஜமுந்திரி சென்றடையும்.
இந்த தகவலை புதுச்சேரி விமான நிலைய இயக்குனர் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இன்டிகோ (IndiGo) விமானம்
இன்டிகோ (IndiGo), இந்தியாவின் அரியான மாநிலத்தில் உள்ள குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இது பயணிகளுக்கான விமானங்களை இயக்குகிறது. இந்தியாவின் குறைந்த கட்டண விமானச் சேவைகளில் இதுவும் ஒன்று. இந்தியாவிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியது ஆகும். 2014 ஆம் ஆண்டு மே மாதத்தின் படி, இதன் சந்தைப் பங்கீடு 31.7 சதவீதம் ஆகும். விரைவாக வளர்ந்துவரும் உலகிலுள்ள மிகக்குறைந்த விமானசேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 79 புதிய ஏர்பஸ் 320 ரக விமானக்குழுக்களின் உதவியுடன் இந்நிறுவனம் நாள்தோறும் 516 தினசரி விமானங்களை இயக்குகிறது. இதன் மூலம் 36 இலக்குகளை அடைய இயலும்.




















