மேலும் அறிய

Madras HC to Tamil Newspaper: 'தலைவர்களின் பெயர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும்’ ஊடகங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

நாட்டின் தலைவர்கள் குறித்து செய்தி வெளியிடும் போது அவர்களுக்கு உரிய மரியாதையும், அவர்கள் பெயருக்கான அங்கீகாரமும் கொடுக்க வேண்டும்

தலைவர்களின் பெயர்களை குறிப்பிடும் போது, அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என பத்திரிகைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.Madras HC to Tamil Newspaper: 'தலைவர்களின் பெயர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும்’ ஊடகங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

'பெரு மழையை வெள்ளமாக மாற்றிய தமிழக அரசு' என்ற தலைப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தினமலர் நாளேடு செய்து ஒன்றை வெளியிட்டது. அதில், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி தினமலர் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டார் ஆர்.லக்‌ஷ்மிபதி ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் நகர அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த அவதூறு வழக்குக்கு தடை விதிக்கக்கோரி ஆர்.கிருஷ்ணமூர்த்தியும், லக்‌ஷ்மிபதியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்தனர்.

Madras HC to Tamil Newspaper: 'தலைவர்களின் பெயர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும்’ ஊடகங்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!
மறைந்த தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிடவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தனிப்பட்ட முறையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆட்சேபமான செய்தி வெளியிட்டிருந்தாலும் கூட, தனக்கெதிராக வழக்கு தொடர நகர அரசு தலைமை வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை என்றும் வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி,  அவதூறு செய்தி வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதே வேளையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அந்த குறிப்பிட்ட செய்தியில் 'ஜெ' என குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிக்கைக்கு நீதிமதி கண்டனம் தெரிவித்தார். மேலும், நாட்டின் தலைவர்கள் குறித்து செய்தி வெளியிடும் போது அவர்களுக்கு உரிய மரியாதையும், அவர்கள் பெயருக்கான அங்கீகாரமும் கொடுக்க வேண்டும் எனவும், அவமரியாதை செய்து செய்தி வெளியிட நினைப்பதை பத்திரிகைகள் கைவிட வேண்டுமெனவும் நீதிபதி இந்த வழக்கின் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் மகனுக்கு பதவி! வெளுத்தெடுத்த அலிஷா அப்துல்லா! ”அண்ணாமலைக்காக வந்தேன்”
PMK Lawyer Attack Police : போலீஸ் கன்னத்தில் பளார்!எல்லைமீறிய பாமககாரர் பகீர் வீடியோ
Ungaludan Stalin | உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்த அவலம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்
MK Stalin Germany | “வாங்க ஸ்டாலின் சார்” கான்வாய் அனுப்பிய அமைச்சர் ஜெர்மனியில் கெத்துகாட்டிய CM
Inbanithi Red Giant | உதயநிதி பாணியில் மகன்! இன்பநிதி சினிமாவில் ENTRY! வெளியான முக்கிய அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
Sengottaiyan Press Meet : ’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
ராமதாஸ் vs அன்புமணி! மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு! தைலாபுரத்தில் நடந்த முக்கிய ஆலோசனை!
ராமதாஸ் vs அன்புமணி! மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு! தைலாபுரத்தில் நடந்த முக்கிய ஆலோசனை!
Embed widget