மேலும் அறிய

கனமழையில் மூழ்கும் 4 மாவட்டங்கள்! 4 அமைச்சர்களுக்கு அவசர உத்தரவு போட்ட முதலமைச்சர்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் கூடுதலாக நான்கு அமைச்சர்கள் நியமனம்  செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 
கூடுதலாக நான்கு அமைச்சர்கள் நியமனம்  செய்யப்பட்டுள்ளனர். இதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வாட்ஸ்அப் அறிவிப்பு:

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடுஅரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்”-ல் பதிவுகளை தெரிவிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். 

4 அமைச்சர்களுக்கு அவசர உத்தரவு போட்ட முதலமைச்சர்:

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஞானதிரவியம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்தி பணிகளை விரைவுப்படுத்த கூடுதலாக பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகிய அமைச்சர்களை தமிழ்நாடு முதலமைச்சர் நியமித்துள்ளார்.   

மேலும், கனமழையால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும்  நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின்  வாட்ஸ்அப் எண்: 8148539914 மற்றும் “டிவிட்டர்” மூலமாக பதிவுகளை தெரிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாட்ஸ்அப்எண் : 8148539914

டிவிட்டர் :http://twitter.com/tn_rescuerelief (Username - @tn_rescuerelief)" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TN Police vs TNSTC : காவல்துறை vs போக்குவரத்து துறைவலுக்கும் மோதல்? ’’பழிக்குப்பழியா?’’Prashant Kishor Angry : ’’வீடியோ ஆதாரம் இருக்கா?’’பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!வாக்குவாதமான நேர்காணல்Arvind Kejriwal : ’’முதல்வர் பதவி ராஜினாமா?’’கெஜ்ரிவால் சொன்ன SECRET!பாஜகவுக்கு செக்!TN Cabinet Shuffle :முதல்வரின் மேஜையில் ரிப்போர்ட்..கலக்கத்தில் 3 அமைச்சர்கள்! பரபரக்கும் அறிவாலயம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Embed widget