Innocent Divya IAS : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராக இன்னசன்ட் திவ்யா நியமனம் - தமிழக அரசு
நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட இன்னசன்ட் திவ்யா தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாவு அரசின் தலைமை செயலாளர் வெ. இறையன்பு இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
“ வருவாய் நிர்வாகத்துறையின் ஆணையரும், பேரிடர் மேலாண்மைத்துறையின் இயக்குனருமான சுப்பையா ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு பால்வளத்துறையின் இயக்குனராகவும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பொறுப்பை வகித்து வந்த கந்தசாமி ஐ.ஏ.எஸ். பதவியிடம் மாற்றப்பட்டு பேரிடர் மேலாண்மைத்துறையின் இயக்குனராகவும் மற்றும் வருவாய் நிர்வாகத்துறையின் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.ஏ.ராமன் ஐ.ஏ.எஸ். கூடுதலாக பொறுப்பு வகித்துவந்த தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனர் பொறுப்பிற்கு, நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா நியமிக்கப்படுகிறார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்