Nilofer Kafeel | முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அதிமுகவிலிருந்து நீக்கம்
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
![Nilofer Kafeel | முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அதிமுகவிலிருந்து நீக்கம் former minister nilofer kafeel dismissed from party membership from admk Nilofer Kafeel | முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அதிமுகவிலிருந்து நீக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/21/fc81149beebe2841daf25c8333f053a6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் நிலோபர் கபில் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)