நடிகை சாந்தினி விவகாரம்: கருக்கலைப்பு டாக்டரிடம் விசாரணை; சாந்தியினியிடம் ரகசிய வாக்குமூலம்!

நடிகை சாந்தினி 3 முறை கருக்கலைப்பு செய்ததாக கூறிய நிலையில், மாஜி அமைச்சர் மணிகண்டனின் நண்பர் எனக்கூறப்படும் சம்மந்தப்பட்ட டாக்டரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் நடிகை சாந்தினியிடம் மாஜிஸ்ரேட் மூலம் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 


தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு  எதிராக கடந்த வாரம் நாடோடிகள் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற துணை நடிகை சாந்தினி, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை, நாளை வரை கைது செய்ய தடை விதித்துள்ளது.


இந்நிலையில், இந்த வழக்கில் சாந்தினி கொடுத்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வருவதாகவும், சைபர் கிரைம் போலீசாரும் அவர் கொடுத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை சரிபார்த்து வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். சாந்தினி 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும், அவர் கருக்கலைப்பு செய்தது மணிகண்டனின் நண்பரின் மருத்துவமனை என்றும் சாந்தினி கூறியுள்ளார். கருக்கலைப்பு செய்த டாக்டரிடமும் விசாரணை நடைபெறுகிறது என்றார் அந்த அதிகாரி.


அமைச்சர் மணிகண்டன் வழக்கு அப்டேட் : பதில் மனு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவு


மேலும், “மணிகண்டனின் கார் ஓட்டுநர், அவர் அமைச்சராக இருந்த போது அவரிடம் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். சாந்தினி வசித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மணிகண்டன் அடிக்கடி சென்று வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சாந்தினியை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்படும்” என அதிகாரி கூறினார்.


முன்னதாக சாந்தினி அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற போது, தன்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததாகக் கூறியுள்ளார். தற்போது திருமணம் செய்ய மறுப்பதுடன், அவருடன் தனியாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்த புகார் மனுவில் கூறி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல்,  பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.நடிகை சாந்தினி விவகாரம்: கருக்கலைப்பு டாக்டரிடம் விசாரணை; சாந்தியினியிடம் ரகசிய வாக்குமூலம்!


அதில்,  திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக கூறும் புகார்தாரர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக நடிகை செயல்பட்டு வருவதாகவும்,  மலேஷியாவில் இதுபோல பலரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் உள்ளன என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், மணிகண்டனுக்கு, முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பதாக நடிகை சாந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மணிகண்டன் மீதான விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் முன் ஜாமின் வழங்க காவல்துறை தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து முன் ஜாமின் வழக்கை ஜூன் 9-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், முன் ஜாமின் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு  நீதிபதி உத்தரவிட்டார்.


ADMK Manikandan on Shanthini Case | கைதாகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ? - 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Tags: case Manikandan admk minister actress santhini sexual harassement

தொடர்புடைய செய்திகள்

வீரபாண்டி ஈஸ்வரர் கோயில் வைகாசி மாத பிரதோஷ விழா

வீரபாண்டி ஈஸ்வரர் கோயில் வைகாசி மாத பிரதோஷ விழா

குஷ்புவின் மின்சார புகார்... டுவிட்டரில் குவியும் கருத்துக்கள்!

குஷ்புவின் மின்சார புகார்... டுவிட்டரில் குவியும் கருத்துக்கள்!

’இந்த பொறுப்பு சித்த மருத்துவத்துக்கான அங்கீகாரம்!’ - கு.சிவராமன்

’இந்த பொறுப்பு சித்த மருத்துவத்துக்கான அங்கீகாரம்!’ - கு.சிவராமன்

PTR Vs H Raja : ”நான் யார் எனத் தெரிந்துகொண்டேன்” - ஹெச்.ராஜா விமர்சனத்தை ஹேண்டில் செய்த பி.டி.ஆர்

PTR Vs H Raja : ”நான் யார் எனத் தெரிந்துகொண்டேன்”  -  ஹெச்.ராஜா விமர்சனத்தை ஹேண்டில் செய்த பி.டி.ஆர்

தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் துரைமுருகன் . 

டாப் நியூஸ்

Tamil Nadu Corona LIVE: ஒரே நாளில் 31,360 பேர் குணமடைந்தனர்

Tamil Nadu Corona LIVE: ஒரே நாளில் 31,360 பேர் குணமடைந்தனர்

20 Years Of Citizen: மேற்கே உதித்த சூரியனும்... அஸ்தமித்த ஆஸ்திரேலியாவும்! சிட்டிசன் பாடல்கள் ரீவைண்ட்!

20 Years Of Citizen: மேற்கே உதித்த சூரியனும்... அஸ்தமித்த ஆஸ்திரேலியாவும்! சிட்டிசன் பாடல்கள் ரீவைண்ட்!

20 years of Citizen: அத்திப்பட்டி சுப்பிரமணியும்... அப்துல்லா அந்தோணியும்!

20 years of Citizen: அத்திப்பட்டி சுப்பிரமணியும்... அப்துல்லா அந்தோணியும்!

Netrikann | ரெடியா இருங்க பாசு.... நாளை காலை வருகிறார் நயன்தாரா!

Netrikann | ரெடியா இருங்க பாசு.... நாளை காலை வருகிறார் நயன்தாரா!