மேலும் அறிய

DMK Venu Died: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.. திருவள்ளூரில் திமுகவின் அடையாளமான கி. வேணு காலமானார்..

DMK Venu Died: திமுகவின் முக்கிய நிர்வாகியான திருவள்ளூர் முன்னாள் மாவட்ட செயலாளர் கி. வேணு உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.

DMK Venu Died: திமுகவின் முக்கிய நிர்வாகியான திருவள்ளூர் முன்னாள் மாவட்ட செயலாளர் கி. வேணு காலமானார்.

கி. வேணு காலமானார்:

திருவள்ளூர் மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல் நலக்குறைவால் அக்டோபர் 21 ஆம் தேதி இன்று அதிகாலை காலமானார். இதையடுத்து அவரது சொந்த ஊரான கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.   அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேரில் சென்று வேணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் பயணம்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கி. வேணு திமுகவின் முக்கிய தலைவராகவும், கட்சியின் அடையாளமாகவும் திகழ்ந்தார். கும்மிடிப்பூண்டியார் என தொண்டர்களால் அழைக்கப்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகி இருந்தார். 1989, 1996 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். திருவள்ளூர் மாவட்ட செயலாளராகவும் அவர் இருந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் திமுகவை வலுவாக கட்டியமைத்ததில், வேணுவின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 1975ம் ஆண்டு  மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு,  மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடன் ஓராண்டு சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் 'கலைஞர் விருது' வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்:

வேணுவின் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், தமிழ்நாட்டின் வட எல்லையான திருவள்ளூர் மாவட்டத்தில் கழகத்தைக் கட்டிக் காத்த தீரர் அருமைச் சகோதரர் கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டுத் துடிதுடித்துப் போனேன். எத்தகைய இடர் வரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சுக்குச் சொந்தக்காரர் அவர். இந்திய வரலாற்றின் கருப்புப் பக்கமான மிசாவை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு சிறை ஏகிய போராளி அவர். மிசா சிறைவாசத்தில் என்னோடும், கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களோடும் சிறையில் வாடியவர் அவர்.

கும்மிடிப்பூண்டி என்றாலே வேணுதான் என்று சொல்லுமளவுக்கு, அந்தத் தொகுதி மக்களிடமும் ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்ட மக்களிடமும் அன்பு காட்டி நற்பெயர் பெற்ற அவரை இன்று இழந்து தவிக்கிறோம் என்று எண்ணுகையில் கண்களில் கண்ணீர் ததும்புகிறது.

பரந்து விரிந்த ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்டக் கழகத்தின் செயலாளராக அவர் இருந்தபோது, அந்த மாவட்டத்தை முழுவதுமாக வலம் வரவே ஓரிரு நாட்களாகும். அந்த மாவட்டத்தில் இருந்த ஒவ்வொரு ஊரிலும் - வீட்டிலும் தனது காலடித் தடத்தைப் பதிய வைத்துவிட்டே வீடு திரும்புவார் அவர். இப்படி கழகப் பணிகளே தன் உயிர்மூச்சென வாழ்ந்த அவர், உடல் நலிவுற்று இருந்தபோதும் என்னைக் காண அண்ணா அறிவாலயம் வருவதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருமுறை மருத்துவமனையில் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தபோது, ஓய்வெடுக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவரோ, தான் விரைவில் நலம்பெற்று அடுத்த கழக நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வேன் என்றார். இப்படி எந்நேரமும் கழகமே அவரது சிந்தையில் நிறைந்திருந்தது.

இத்தகைய அர்ப்பணிப்புணர்வாலும் ஆற்றல்மிக்க அவரது செயல்பாடுகளாலும், கழகத்தின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்து, ஒன்றியக் கழகச் செயலாளராக, மாவட்டக் கழகச் செயலாளராக, இருமுறை சட்டமன்ற உறுப்பினராக, கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினராக என முத்திரை பதித்த அவரது உழைப்பும் தியாகமும் கழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் நிரம்பியிருக்கும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் அவருக்குக் கலைஞர் விருது வழங்கி வாழ்த்தினேன். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமண விழாவைத் தலைமை தாங்கி நடத்தி வைத்துப் பேசினேன். அதற்குள் அவரது மறைவுக்கு இரங்கல் சொல்லும் நாள் வந்துவிட்டதை எண்ணி மனம் வாடுகிறேன். கும்மிடிப்பூண்டி வேணு அவர்களது பிரிவால் வாடும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும் - கும்மிடிப்பூண்டி தொகுதி வாழ் மக்களுக்கும் - அவரது குடும்பத்தினர்க்கும் - கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகளுக்கும் ஆறுதல் சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்ள முயல்கிறேன். கும்மிடிப்பூண்டி வேணு அவர்கள் என்றும் நம் நினைவுகளிலும் நெஞ்சங்களிலும் வாழ்வார்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget