மேலும் அறிய

நாய் மாதிரி காத்து கிடந்தாங்க.. அதிமுக முன்னாள் அமைச்சர்களை சாடிய தா.மோ.அன்பரசன்!

திமுக இந்த அரசை விட்டுவிடாது. உங்களை துண்டு துண்டாக உங்களை கதையை இன்னும் 6 மாதத்தில் முடிக்கிறோம். தவெக எம்.எல்.ஏ.,க்களை ஓட்டு போட்டு தேர்வு செய்த அதேமக்கள் அவர்களை ஓட விடுவார்கள் என தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

மெண்டல்களிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கிறார்கள் என தமிழக வெற்றிக் கழக அரசை முன்னாள்  திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடுமையாக சாடியுள்ளார்.  

சென்னை ஆலந்தூர் தொகுதியில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் கொடுப்பதாக விஜய் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஓராண்டில் மட்டும் பதிவு பெற்ற திருமணங்கள் 7 லட்சம் நடைபெறுகிறது. இன்றைக்கு ஒரு சவரன் ரூ.1.15 லட்சம் ஆகிறது. அதுபோக பிறக்கும் குழந்தைகளுக்கு 2 கிராம் தங்க மோதிரம் கொடுக்கப்போவதாக சொன்னார்கள். ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பிறக்கிறார்கள். பட்டுப்புடவை வேறு திருமணச்சீரில் தர வேண்டும். தமிழ்நாட்டின் மொத்த வருமானம் ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் கோடி தான். ஆனால் தவெக அரசு அறிவித்துள்ள திட்டத்துக்கு ரூ.12 லட்சம் கோடி தேவைப்படும். இதற்கான பணத்தை விஜய் அவர் அம்மா வீட்டில் இருந்து எடுத்து வந்து கொடுப்பாரா?.. 

ஏமாற்றி ஓட்டு வாங்குன நீ இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும். இப்போது புதிதாக ஒன்றை சொல்கிறார்கள். திமுக ஆட்சி வந்ததும் எல்லாத்தையும் உடனடியாக செயல்படுத்தி விட்டதா என கேட்கிறார்கள்.    நிதி நிலைமை எல்லாம் சரி செய்து தானே எல்லாம் செய்தார்கள். அதை நாங்களும் பண்ணுவோம் என கூறுகிறார்கள். 

தவெக அமைச்சர் ஒருவருக்கு தன்னுடைய துறை எதுவென்று கூட தெரியவில்லை. அதேபோல் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கோயில் வளாக பிரசாத கடையில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருக்கும் பொருட்களின் தயாரிப்பு தேதிக்கு ஆதாரம் இருக்கிறதா என கேட்கிறார். எல்லா மெண்டல்களிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சி இன்று நடந்து வருகிறது. 

திமுக இந்த அரசை விட்டுவிடாது. உங்களை துண்டு துண்டாக உங்களை கதையை இன்னும் 6 மாதத்தில் முடிக்கிறோம். தவெக எம்.எல்.ஏ.,க்களை ஓட்டு போட்டு தேர்வு செய்த அதேமக்கள் அவர்களை ஓட விடுவார்கள். திமுக எவ்வளவு வேலை பார்த்தோம். கொளத்தூருக்கு மு.க.ஸ்டாலின் செய்யாததா சொல்லுங்கள். அந்த தொகுதியை சென்று பாருங்கள். அங்குள்ள மக்களுக்கு நன்றி இருக்கிறதா?

Also Read: CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!

இனி வேகத்துடன் பணியாற்றுவோம். உள்ளாட்சி தேர்தலில் எதிரிகளை வீழ்த்துவோம். அதிமுகவினரை பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சராக இருந்தவர்கள் மானம் கெட்டுபோய் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். நான் மிகவும் பரிதாபப்படுகிறேன். பனையூர் அலுவலக கேட்டில் நின்று முன்னாள் அதிமுக அமைச்சர்கள் நாய் மாதிரி காத்து கிடக்கிறார்கள். அப்படிப்பட்ட கேவலமான நிலைக்கு இந்த நாடு சென்று விட்டது” என தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Erode power cut: திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Embed widget