தமிழகத்தில் கடன்கார ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது- ஹெச். ராஜா திமுக மீது கடும் தாக்கு...!
ஏமாற்றுகாரர்களின் ஆட்சி தான் தற்போது நடைபெற்று வருகிறது. முதன்முதலாக தமிழக அரசு இலவச கலர் டிவிக்குத்தான் கடன் வாங்கியது என ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பாரதிய ஜனதாவின் முன்னாள் தேசிய தலைவர் எச். ராஜா பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் :-
தமிழகத்தில் ஆட்சி அமைந்த 90 நாட்களில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கிய கடன்கார ஆட்சி தமிழ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற 6 மாதங்களில் 92,000 கோடி மேலும் கடன் வாங்க போவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். அது தவிர 50,000 கோடி பற்றாக்குறை என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். நிதி பற்றாக்குறை என்பது பண வீக்கத்தை ஏற்படுத்தும். வெள்ளை அறிக்கையில் முன்பு அரசாங்கம் அதிகமாக கடன் வாங்கியது என்று சொல்லிவிட்டு 90 நாளில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கிக்கொண்டு மேலும் 92 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டமிட்டிருக்கிறது எதைக் காட்டுகிறது என்பது எனக்கு தெரியவில்லை என்றும், 1967 ல் திமுக தேர்தல் வாக்குறுதியில் 3 படி அரிசி இலவசம் என்று அறிவித்து விட்டு ஆட்சிக்கு வந்தவுடன் 3 படி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று சொன்னார்கள்.
அப்படி பட்ட ஏமாற்றுகாரர்களின் ஆட்சி தான் தற்போது நடைபெற்று வருகிறது. முதன்முதலாக தமிழக அரசு இலவச கலர் டிவிக்குத்தான் கடன் வாங்கியது என்றும் கூறினார். தற்போது தமிழகத்தில் கடன்கார ஆட்சி நடக்கிறது என கடுமையாக திமுக ஆட்சியை குற்றம் சாட்டினார்.