அன்புச்செழியன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வீடுகளில் ஐ.டி. ரெய்டு..! கணக்கில் வராத ரூ.200 கோடி..!
அன்புச்செழியன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூபாய் 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல ஃபைனான்சியராக வலம் வருபவர் அன்புச்செழியன். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக சென்னை மற்றும் மதுரையில் அவருக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அவர் மட்டுமின்றி, தமிழ் திரையுலகின் பிரபல படத்தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ்.தாணு, சத்யஜோதி பிலிம்ஸ் படத் தயாரிப்பு உரிமையாளர் தியாகராஜன், ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு உரிமையாளர் ஞானவேல் ராஜா, ட்ரீம் வாரியம் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், இந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ கடந்த 2-ந் தேதி முதல் சில தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் படிக்க : நெல்லை: கடன் வாங்கியதாக வந்த SMS.. விசாரணையில் வெளியான பல லட்ச மோசடி! சிக்கிய ஆசிரியர்!
சென்னை, மதுரை, கோவை மற்றும் வேலூரில் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கியது. கணக்கில் வராத பணப்பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் முதலீடுகளுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின்போது ரகசிய மற்றும் மறைவான இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த அறைகளில் இருந்து கணக்கில் வராத பல திரைப்பட கணக்குகள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. திரையரங்கில் இருந்து வசூலிக்கின்ற கணக்கில் வராத பணங்களுக்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இருந்து கிடைக்கும் உண்மையான வசூலை திட்டமிட்டு மறைத்துள்ளனர். இந்த சோதனையின் முடிவில் ரூபாய் 200 கோடி கணக்கில் காட்டப்படாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கணக்கில் வராத ரூபாய் 26 கோடி, ரூபாய் 3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : பணி ஓய்வுக்குப்பின்னும் தேடிய போலீஸ்! 9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி கண்டுபிடிப்பு!
மேலும் படிக்க : Crime: 3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்; இறந்த குழந்தைகள் - சோகத்தில் கிராமம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்