மேலும் அறிய

நெல்லை: கடன் வாங்கியதாக வந்த SMS.. விசாரணையில் வெளியான பல லட்ச மோசடி! சிக்கிய ஆசிரியர்!

"போலி ஆவணங்கள் தயார் செய்து 4 காசோலைகள் மூலம் ரூபாய் 54 லட்சம் மோசடி செய்ய திட்டமிட்டு இருப்பதும் அதில் முதற்கட்டமாக ஒரு காசோலை மூலம் ரூபாய் 13 லட்சம் மட்டுமே மோசடி செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது"

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர், கிளாக்குளம் பகுதியைச் சேர்ந்த பேச்சியப்பன் (57). இவர் வீரவநல்லூர் அருகே உள்ள ஆர்.சி நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பேச்சியப்பன் என்பவருடன் காலங்கரையை சேர்ந்த லீனா என்பவரும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவருடைய சகோதரி சலோமி (60) என்பவர் பாளையங்கோட்டை,  வி எம் சத்திரத்தில் வசித்து வருகிறார். ஆசிரியர்களுக்கென கடன் வழங்குவதற்கென ஆசிரியர் சிக்கன நாணய கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.  இந்த சூழலில் ஆசிரியை லீனா மற்றும் அவரது சகோதரி சலோமி ஆகிய இருவரும் சேர்ந்து கூட்டுறவு சங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று உள்ளனர்,

குறிப்பாக TNEMIS என்ற App மூலமாக ஆசிரியை லீனா தன்னுடன் பணி புரியும் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளின் தகவல்களை பெற்று உள்ளார். பின்னர் சேரன்மகாதேவியில் உள்ள ஆசிரியர்களுக்கான கூட்டுறவு சங்கத்தில் தன்னுடன் பணிபுரியும் ஆசிரியர்களின் முகவரியில் அவர்களுடைய புகைப்படத்தை மாற்றி, ஆசிரியர்களுடைய கையொப்பம் போலவே போலியாக கையொப்பத்தை போட்டு ரூ. 54 லட்சம் வரை கடனாக விண்ணப்பித்துள்ளார். அப்போது ஆசிரியர் பேச்சியப்பன் செல்போன் எண்ணுக்கு கடன் பெற்றதாக மெசேஜ் சென்றுள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பேச்சியப்பன் தான்  எந்த ஒரு கடனும் வாங்காத  நிலையில்  தனக்கு வந்த மெசேஜ் அடிப்படையில் விசாரித்ததில் அவரது பெயரில் கடன் வாங்கியதாக தெரிய வந்துள்ளது. உடனடியாக ஆசிரியர் பேச்சியப்பன் பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் புகார் அளித்து உள்ளார்,


நெல்லை: கடன் வாங்கியதாக வந்த SMS.. விசாரணையில் வெளியான பல லட்ச மோசடி! சிக்கிய ஆசிரியர்!

அப்புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்து தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ஆசிரியை லீனா பாளையங்கோட்டை வி எம் சத்திரத்தில் வசிக்கும் தனது சகோதரி சலோமியுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. குறிப்பாக போலி ஆவணங்கள் தயார் செய்து 4 காசோலைகள் மூலம் ரூபாய் 54 லட்சம் மோசடி செய்ய திட்டமிட்டு இருப்பதும் அதில் முதற்கட்டமாக ஒரு காசோலை மூலம் ரூபாய் 13 லட்சம் மட்டுமே மோசடி செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 41 லட்சத்தை காசோலை மூலம் பெற முயல்வதற்கு முன்பே காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு பணம் வங்கியிலேயே தடுக்கப்பட்டது. தொடர்ந்து இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியை லீனா மற்றும் அவரது சகோதரி சலோமி மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் ஆசிரியர் ஒருவரே இது போன்ற மோசடியில் ஈடுபட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget