மேலும் அறிய

வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை

திருவிடைமருதூரில்தான் மழைப் பொழிவு அதிகம். இத்தகவலை தஞ்சை பேரிடர் மோலாண்மை துறை தகவல் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர்: எப்போ பெய்யும்... எப்போ நிற்கும் என்று தெரியாமல் தஞ்சை மக்களை அல்லாட வைத்து வருகிறது மழை. கடந்த 2 நாட்களாக வருவேன்... வர மாட்டேன் என்று கருமேகங்கள் திரண்டு நின்று மழை வரும் என்று எதிர்பார்த்தால் வராது. கருமேகங்களே இல்லாத போது ஒரு மணி நேரத்திற்கு மழையானது வெளுத்தெடுக்கும். இப்படி மழை மக்களை சுற்றலில் விட்டு  அல்லாட வைத்து வருகிறது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது. ஆரம்பத்தில் லேசான அளவில் பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறியது.

வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை

தொடர்ந்து 3 மணி நேரம் மழை வெளுத்தெடுத்தது. இதனால் தஞ்சையின் நகர் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதற்கிடையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் கனமழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் வல்லம், திருவையாறு, பூதலூர், பாபநாசம், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. 

இதையும் படிங்க: Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

காலையில் பெய்த மழையால் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர். நேற்று காலை முதல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. எப்போது பெய்யும், எப்போது நிற்கும் என்று தெரியாத அளவிற்கு திடீர், திடீரென்று பெய்து மக்களை மழை மிரட்டியது. 

இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 95.30 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதன்படி  திருவிடைமருதூரில் 18.90 மி.மீ, கும்பகோணத்தில் 11மி.மீ, தஞ்சாவூரில் 6.50மி.மீ, பாபநாசத்தில் 11.80 மி.மீ,  திருவையாறு 0.60 மி.மீ, பூதலூரில் 3.80 மி.மீ, ஒரத்தநாடு 10.20 மி.மீ, பட்டுக்கோட்டை 17.50 மி.மீ, போராவூரணியில் 15 மி.மீ.  என மொத்தமாக 95.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சராசரியாக 9.53 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் திருவிடைமருதூரில்தான் மழைப் பொழிவு அதிகம். இத்தகவலை தஞ்சை பேரிடர் மோலாண்மை துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதேபோல் இன்றும் அதிகாலை 4 மணியிலிருந்து பூதலூர், வல்லம், ஆலக்குடி, 8.கரம்பை உட்பட பல பகுதிகளில் மழை சாறலாக பெய்து கொண்டே இருந்தது. தஞ்சை மாநகரில் காலை 10 மணியளில் சாரலாக பெய்ய ஆரம்பித்து விட்டு விட்டு பெய்த மழையால் வாகன ஓட்டுனர்கள் நனைந்து கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது. மதியத்தில் ஒரு மணிநேரம் திடீரென்று பெய்த கனமழையை எதிர்பார்க்காத மக்கள் நனைந்து கொண்டே ஒதுங்க இடம் தேடி ஓட்டமாய் ஓடி வேண்டிய நிலை உருவானது. இதுகுறித்து தஞ்சை மாவட்டம் பூதலூர் விவசாயி சுதாகர் கூறியதாவது:

இந்த மழை தற்போதைய சம்பா சாகுபடி பயிர்களுக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும். தற்போது பயிர்களுக்கு தண்ணீர் தேவை என்ற நிலையில் இந்த மழை பெரிய அளவில் உதவுகிறது. இதேபோன்று பெய்தால் பயிர்கள் நன்கு செழித்து வளரும். ஆற்றில் தண்ணீர் குறைவாக வருகிறது என்று வருத்தப்பட்ட நிலையில் இந்த மழை எங்களுக்கு கை கொடுத்துள்ளது. பூச்சி தாக்குதல்கள் ஓரிரு இடங்களில் காணப்பட்டாலும் இந்த மழை விவசாயிகளுக்கு மிகுந்த உதவியாகத்தான் உள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மழைநீர் தேங்காமல் தடுக்க அதிரடி! தஞ்சையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம்!
மழைநீர் தேங்காமல் தடுக்க அதிரடி! தஞ்சையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம்!
விரும்பிய வரம் தரும் விரதங்கள்! செவ்வாய் தோஷம் முதல் செல்வ வளம் வரை… பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!
விரும்பிய வரம் தரும் விரதங்கள்! செவ்வாய் தோஷம் முதல் செல்வ வளம் வரை… பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்!
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
டெல்டா மாவட்டங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் கவனத்திற்கு... உரிமம் புதுப்பிக்க அக்.31-ம் தேதி கடைசி நாள்
டெல்டா மாவட்டங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் கவனத்திற்கு... உரிமம் புதுப்பிக்க அக்.31-ம் தேதி கடைசி நாள்

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget