மேலும் அறிய

கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு சம்பவம்: தமிழக மீனவரின் உடல் ஒப்படைப்பு

சடலத்தை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர் அறிவித்திருந்த நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடத்திய பேச்சு வார்த்தையை எடுத்து சடலத்தை பெற்றுச் சென்றார்.

தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில் தமிழக மீனவர்கள் காவிரிநீர் பிடிப்பு பகுதியான பாலாறு கலக்கும் இடத்தில் பரிசலில் சென்று மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்று நான்கிற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாலாற்றில் மீன்பிடித்து உள்ளனர். அப்பொழுது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் சிலர் தப்பி சென்றுவிட்டனர். ஆனால் கோவிந்தபாடியை சேர்ந்த ராஜாவை காணவில்லை என்பதால் கர்நாடகா வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்று ஆற்றங்கரையில் தேடினர். மேலும் பாலாறு ஆற்றங்கரையில் இருந்த பரிசல்களையும்,வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு சம்பவம்: தமிழக மீனவரின் உடல்  ஒப்படைப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் தமிழக கர்நாடகா எல்லை பகுதியான அடி பாலாறு காவிரி ஆறு பகுதியில் உடல் மிதந்து வந்தது. இதனை தமிழ்நாடு காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மீனவர் ராஜா எப்படி இறந்தார் என்பது குறித்து தகவல் தெரியும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீனவர் உயிரிழந்த சம்பவத்தால் தமிழக கர்நாடகா எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் மண்டல வன அலுவலர் சம்பத் படேல் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜா உள்ளிட்ட நான்கு பேர் கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவில் அடிபாலாறு வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றார்கள் என்றும், அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட மான் இறைச்சி மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கர்நாடகா காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மீன் பிடிக்க சென்றவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட சென்றது ஏன் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு சம்பவம்: தமிழக மீனவரின் உடல்  ஒப்படைப்பு

உயிரிழந்த மீனவர் ராஜாவின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வந்தனர். மேலும் கர்நாடக வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் நேற்று காலை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் ராஜாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்றப்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வந்தனர். பிரேத பரிசோதனைக்கு அவர்கள் தரப்பிலிருந்து ஒரு மருத்துவர் மற்றும் வீடியோபதிவு செய்ய ஒரு நபரை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனால் மாலை வரை பிரேத பரிசோதனை நடத்தப்படாமல் இருந்தது. அதேசமயம் உயிரிழந்த ராஜாவின் மனைவி சகோதரர் தாய் மற்றும் உறவினர்களிடம் சேலம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தினி தலைமையில் விசாரணை நடத்தினார். பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு எந்தவித தடையமும் இல்லை என தகவல் வெளியாகியது. உடனடியாக ராஜாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இன்று காலை சடலத்தை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர் அறிவித்திருந்த நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடத்திய பேச்சு வார்த்தையை எடுத்து சடலத்தை பெற்றுச் சென்றார். உயிரிழந்த ராஜாவின் சடலம் அவரது சொந்த ஊரான கோவிந்தபாடிக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK LIVE Score: 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டுமா RCB? டாஸ் வென்ற CSK பவுலிங் தேர்வு!
RCB vs CSK LIVE Score: 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டுமா RCB? டாஸ் வென்ற CSK பவுலிங் தேர்வு!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK LIVE Score: 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டுமா RCB? டாஸ் வென்ற CSK பவுலிங் தேர்வு!
RCB vs CSK LIVE Score: 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டுமா RCB? டாஸ் வென்ற CSK பவுலிங் தேர்வு!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
Embed widget