Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்டத்தில், 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில், ஐந்தாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் பீகாரைச் சேர்ந்த 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தொகுதி, லடாக் தொகுதி, ஜார்கண்டைச் சேர்ந்த 3 தொகுதிகள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 13 தொகுதிகள், ஒடிசாவைச் சேர்ந்த 5 தொகுதிகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 14 தொகுதிகள் மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
இந்நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் இன்று பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
ISRO Somnath On Temples : கோயில்களில் நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
ISRO Somnath On Temples : கோயில்களில் நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
கோயில்கள் என்பது வயதில் மூத்தவர்கள் நாம ஜெபம் செய்வதற்கான இடமாக இருக்கக்கூடாது. மாறாக இளைஞர்கள் நாடி வரும் இடமாகவும் இருக்க வேண்டும். அதனால் நூலகங்கள் கோயில்களில் அமைக்கப்பட வேண்டும். மேலும் கோயில்கள் சமூக மாற்றத்துக்கான இடமாகவும் இருக்கவேண்டும் - ஸ்ரீ உதியனூர் தேவி (Sree Udiyanoor Devi Temple) கோயிலில் தரிசனத்துக்குப் பின் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு
நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
நாளை மறுநாள் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 5ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.
எல்லாரும் நாளைக்கு பாஜக தலைமை அலுவலகத்துக்கு வர்றோம் - பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் சவால்
Arvind Kejriwal challenges PM Modi to arrest all AAP leaders, says "will be present at BJP headquarters tomorrow"
— ANI Digital (@ani_digital) May 18, 2024
Read @ANI Story | https://t.co/wx3xyRo17O#ArvindKejriwal #AAP #BJP #PMModi pic.twitter.com/7qellijm1X
Breaking News LIVE: சேலம் முட்டல் நீர்வீழ்ச்சியில் குளித்திடவும், படகு பயணம் மேற்கொள்ளவும் தடை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால், நீர்வரத்து அதிக அளவு வர வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளித்திடவும் படகு பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.
Valparai Erosion Due to Rain : வால்பாறை, அட்டகட்டி 16 கொண்டை ஊசி வளைவில் மழை காரணமாக பாறைகள் சரிந்து விழுந்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள அட்டகட்டி 16 கொண்டை ஊசி வளைவில் மழை காரணமாக பாறைகள் சரிந்து விழுந்தது.
சாலையில் பாறைகள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.