மலைபோல் குவிந்த கோப்புகள் : பி.டி.ஆரின் சுவாரஸ்ய ட்வீட்
தலைமைச் செயலகத்தின் தான் கையாளும் கோப்புகள் குறித்து ட்விட்டரில் சுவாரஸ்யமாக பதிவிடும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த திமுக அமைச்சரவையில் அதிகம் கவனிக்கப்படும் நபராக மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் நிதியமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளார். திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் ஈஷா நில ஆக்கிரமிப்பு குறித்து இவர் பேசி இருந்த வீடியோ வைரலானது. ஹெச்.ராஜா தரப்பில் இருந்தும் அதற்கு எதிர்வினை வந்திருந்தது. திமுக ஆட்சி அமைத்த நாள் இருந்து லைம்லைட்டில் இருக்கும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ட்விட்டர் ஐடியை டேக் செய்து பிரச்னையை தெரிவித்தாலே அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை செய்வதாக உறுதி அளித்து அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் நபராக உள்ளார். நிதியமைச்சராக இருந்து அவரின் செயல்பாடுகள் அனைத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது பிடிஆரின் வழக்கம்.
இன்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் கோப்புகளுக்கு மத்தியில் தான் இருப்பது போன்ற படத்தை பதிவிட்டுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகரானின் பதிவு அதிக கவனம் பெற்ற ஒன்றாக உள்ளது. அவர் இன்றைய தினம் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ஒரு வார காலம் கொரோனா தடுப்பு & பல்வேறு தொகுதி பணிகளில் நான் மதுரையில் இருந்தபோது கோட்டையில் என் அலுவலகத்தில் மலைபோல் கோப்புகள் குவிந்துவிட்டன. இச்சூழலை திருத்தி, கோப்புகளை விரைவாக செயல்படுத்த என் பொறுப்பிலுள்ள பணியாளர் & நிர்வாக சீர்திருத்த துறையின் மூலம் முயற்சி எடுக்கப்படும் என பதிவிட்டுளார்
ஒரு வார காலம் கொரோனா தடுப்பு & பல்வேறு தொகுதி பணிகளில் நான் மதுரையில் இருந்தபோது கோட்டையில் என் அலுவலகத்தில் மலைபோல் கோப்புகள் குவிந்துவிட்டன.
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) June 7, 2021
இச்சூழலை திருத்தி, கோப்புகளை விரைவாக செயல்படுத்த என் பொறுப்பிலுள்ள பணியாளர் & நிர்வாக சீர்திருத்த துறையின் மூலம் முயற்சி எடுக்கப்படும். pic.twitter.com/5tOIjoDiuE
இதே போல கடந்த மே மாதம் 24-ஆம் தேதி ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிடிஆர் ஒரு வாரத்திற்கும் மேல் சென்னையில் இல்லாத நிலையில் கோப்புகள் நிறைய குவிந்துவிட்டன. சென்னை திரும்பிய இன்று அனைத்தையும் முழுவீச்சில் பரிசீலித்தேன் கோப்புகளின் எடைக்கும் அதற்கு ஒதுக்கப்படும் நிதிக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று மட்டும் விரைவாக தெரிய வருகிறது என நகைச்சுவை பதிவையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
ஒரு வாரத்திற்கும் மேல் சென்னையில் இல்லாத நிலையில் கோப்புகள் நிறைய குவிந்துவிட்டன. சென்னை திரும்பிய இன்று அனைத்தையும் முழுவீச்சில் பரிசீலித்தேன்.
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) May 24, 2021
கோப்புகளின் எடைக்கும், அதற்கு ஒதுக்கப்படும் நிதிக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை என்று மட்டும் விரைவாக தெரிய வருகிறது😊 pic.twitter.com/Dwl8JeOIAb